புதுடில்லி, ஜன. 05- இந்தியாவில் பூஞ்சை தொற்று அடிக்கடி காணப்படு கிறது. ஆனால் அதன் பரவல் தெளிவாக வ¬ ரயறுக்கப்பட வில்லை. இதில் முதல் முறை யாக நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்டு இருக்கிறது. டில்லி மற்றும் மேற்கு வங்காள எய்ம்ஸ், சண்டிகாரின் ஜிமர் போன்ற உயர் மருத்துவ நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்களும், இங்கி லாந்தின் மான்செஸ்டர் பல் கலைக்கழக விஞ்ஞானிக ளும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் தொற்று நோய்கள் குறித்த ஆய்வு பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் நாடு முழுவதும் 5 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரத்து 826 பேர் பல்வேறு வகையான கொடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 4.4 சதவீதம் ஆகும். இதில் 10 சதவீதம் பேர் அச்சுறுத்தும் கொடிய தொற்றால் பாதிக்கப் பட்டு இருப்பதும் கண்டுபிடிக் கப்பட்டு உள்ளது. பூஞ்சை தொற்றால் பாதிக்கப் ட்டவர் களில் சுமார் 2.4 கோடி பெண் கள் பிறப்புறுப்பு தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைப் போல டினியா கேப்பிட்டிஸ் எனப்படும் முடிப்பூஞ்சை தொற்றால் இதே எண்ணிக் கையிலான பள்ளி செல்லும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2.5 லட்சம் பேரைப் பாதித்த நுரையீரல் மற்றும் சைனஸ் பூஞ்சை தொற்றுகள் மரணத்திற்கு முக்கிய காரண மாகி இருக்கிறது. மேலும் 17 லட்சத்துக்கும் அதிகமா னோர் நாள்பட்ட சுவாச மண் டல தொற்றாலும், 35 லட்சம் பேர் தீவிர ஒவ்வாமை நுரையீரல் தொற்றாலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்து இருக் கிறது. பூஞ்சை நோய்களால் ஏற்படும் மொத்த சுமை மிகப் பெரியது எனவும், ஆனால் குறைவாக மதிப்பிடப்படுவ தாகவும் இந்த ஆய்வாளர் குழுவின் தலைவரும், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவருமான அனிமேஷ் ராய் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டொன் றுக்கு காசநோயால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை 30 லட்சத்துக்கு மேல் உள்ள நிலையில், பூஞ்சை தொற் றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதா கவும் அவர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment