சென்னை, ஜன. 11- மாற்றுத் திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் 442 தாழ் தளப் பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட் டிற்கு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன் றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதி களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ஆம் ஆண்டு மாற் றுத் திறனாளிகள் உரி மைகள் சட்டம் இயற்றப் பட்டது. இந்த சட்டப் படி, மாற்றுத் திறனாளி கள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகி யோர் அடங்கிய அமர் வில் விசாரணைக்கு வந் தது. அப்போது தமிழ் நாடு அரசு போக்குவரத் துக் கழகம் சார்பில் ஆஜ ரான வழக்குரைஞர், "மாற்றுத் திறனாளிகள் அணு கக்கூடிய வகையில் 442 பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட் டிற்கு வர உள்ளது. இவற்றில் சென்னையில் 242 பேருந்துகளும் மதுரை மற்றும் கோவையில் தலா 100 பேருந்துகளும் பயன் பாட்டிற்கு வர உள்ளது.
சென்னை, மதுரை மற் றும் கோவை மாநகராட் சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலை கள் சரி செய்யபட்டு வருகின்றன. இதனால் மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் முழுமையாக பேருந்து கள் இயங்க முடியாத நிலை உள்ளது. சென்னை யில் மட்டும் 37.4 விழுக் காடு பேருந்துகள் மாற் றுத் திறனாளிகள் அணு கக்கூடிய வகையில் தயார் செய்யபட உள்ளது.மாற் றுத் திறனாளிகளுக்கான பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. மீதமுள்ள பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக கொள் முதல் செய்யப்பட உள் ளது" என்று தெரிவித்தார்.
அப்போது குறுக் கிட்ட நீதிபதிகள், "தாழ் தள பேருந்துகள் என்பது மாற்றுத் திறனாளிகளுக் கானது எனக் கூறுவது தவறானது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேருந் தில் ஏறுவது இன்றளவும் சவாலானதாக உள்ளது. எனவே கொள்முதல் செய்யக்கூடிய பேருந்து களில் நூறு சதவீத பேருந் துகளையும் தாழ்தள பேருந்துகளாக ஏன் மாற்றியமைக்க கூடாது? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்ப தால் நூறு சதவீதம் தாழ் தள பேருந்துகளை பயன் பாட்டிற்கு கொண்டு வர முடியாது" என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதி பதிகள், என்னென்ன தொழில்நுட்ப பிரச்சி னைகள் உள்ளன? என் பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போக்கு வரத்து கழகத்துக்கு உத் தரவிட்டு விசாரணையை ஜனவரி 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment