பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் 31,000 புகார்கள் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் 31,000 புகார்கள் பதிவு

புதுடில்லி,ஜன.2- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-இல் தேசிய மகளிர் ஆணையத் துக்கு (என்சிடபிள்யு) சுமார் 31,000 புகார்கள் கிடைக்கப் பெற்றன. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடு கையில் இதுவே அதிகமாகும்.

தேசிய மகளிர் ஆணைய தகவல் படி, கடந்த 2022-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 30,957 புகார்கள் கிடைக்கப் பெற்றன; இதில் அதிகபட்ச புகார்கள் (9,710), பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை தொடர்புடையவை ஆகும். குடும்ப வன்முறை தொடர்பாக 6,970 புகார்கள், வரதட்சணை கொடுமை குறித்து 4,600 புகார்கள், துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை-பாலியல் வன் கொடுமை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையினரின் அலட்சியம், இணையவழி குற்றங்கள் ஆகியவை தொடர்பாக முறையே 1,701; 1,623; 924 புகார்கள் கிடைக்கப் பெற்றன.

நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் இருந்து 16,872 புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண் டாம் இடத்தில் டில்லி உள்ளது. டில்லி யிலிருந்து 3,004 புகார்கள் பதிவாகின. அடுத்தடுத்த இடங்களில் மகாராட்டிரம் (1,381), பீகார் (1,368), அரியானா (1,362) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தேசிய மகளிர் ஆணையத்துக்கு கடந்த 2021-இல் 30,864 புகார்கள் கிடைக்கப் பெற்றிருந்தன. கடந்த 2014-இல் இருந்து ஒப்பிடுகையில் 2022-இல் கிடைக்கப் பெற்ற புகார்களின் எண்ணிக் கைதான் அதிகமாகும். 2014-இல் 33,906 புகார்கள் மகளிர் ஆணையத்திடம் பதிவாகி இருந்தன.

என்சிடபிள்யு-வில் 

பதிவான புகார்கள்

1. உத்தரப்பிரதேசம்----- 16,872

2. டில்லி-----------------3,004

3. மகாராட்டிரம்----------1,381

4. பீகார்------------------1,368

5. அரியானா-------------1,362

No comments:

Post a Comment