செங்கல்பட்டு அருகே ரூ.300 கோடியில் பூங்கா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

செங்கல்பட்டு அருகே ரூ.300 கோடியில் பூங்கா

சென்னை, ஜன. 2- லண்ட னில் உள்ள ராயல் தாவர வியல் பூங்காவுடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் ரூ.300 கோடி யில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித் துள்ளது. இது தொடர் பாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற் றம் துறை செயலர் சுப் ரியா சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது,

செங்கல்பட்டு மாவட் டம், கடம்பூர் கிராமத்தில் 137 எக்டேர் பரப்பள வில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக தமிழ் நாடு அரசு டிச.28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இத்திட்டம் 2027ஆம் ஆண்டுக் குள் செயல்படுத்தப்படும் இந் தத் திட்டத்தில், பூர்வீக இனங்களின் தோட்டம், ஆர்போரேடம்ஸ், பேம் புசிடம்ஸ், மரக்கன்றுகள் மற்றும் ஹீலிங் கார்டன், மூலிகைத் தோட்டம், ரோஜா தோட்டம், ராக் கரி, ஜப்பானிய தோட் டம், பண்டைய தமிழ் நாட்டின் நிலப் பரப்பு போன்ற கூறுகளும் இடம் பெற்றிருக்கும்.

மேலும், வழிகாட்டப் பட்ட நடைப்பயிற்சி, குழந்தைகள் மற்றும் தாவர உயிரியல் பன்முகத் தன்மை பற்றி மாணவர் களுக்குத் தெரிவிக்கும் கல்வித் திட்டம், ஒழுங்க மைக்கப்பட்ட குழுக்க ளுக்கான பயிற்சிப் பட்ட றைகள் மற்றும் கருத் தரங்குகள், படகு சவாரி, இயற்கை பாதைகள், சைக் கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, விளை யாட்டு மற்றும் பிற ஆரோக்கிய நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுக ளையும் கொண்டிருக்கும்.

இத்தாவரவியல் பூங்கா லண் டன் கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து அமைக்கப்படும். இதற்கான புரிந் துணர்வு ஒப்பந்தம் தனியாக கையெழுத்திடப்படும்.

மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடு, திட்டப் பகுதியைச் சுற்றி வேலி அமைத்தல், போன்ற வற்றுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அரசு சார்பில் ரூ.1 கோடி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment