சென்னை, ஜன. 13- ‘நீட்' தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இரண்டு பேருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ரகுவன்ஷ் மணி. சகேட் குமார் திங் ஆகியோர் தாக்கல் செய்த மனு: கடந்த 2019இல், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் எங்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவுறும் தருவாயில் உள்ளதால், எங்களுக்கு பிணை வழங்க வேண்டும் அதற்கு நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் முழுமையாகக் சுட்டுப்படுகிறோம் எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி, ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மனுதாரர்கள் இருவரும் மாணவர்களுக்குப் பதிலாக வேறு நபர்கள் நீட் தேர்வு எழுத உதவி செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இருவருக்கும் பிணை வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரகுவன்ஷ் மணி, சகேட் குமார் சிங் இருவரும் மதுரையில் தங்கியிருந்து சிபிசிஅய்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தினமும் காலை 10:30 மணிக்கும், மாலை 530 மணிக்கும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் அவர்களது கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் கடவுச்சீட்டு இல்லாத பட்சத்தில் உரிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். அதே போல, ஆதார் அட்டை நகலைச் சமாப்பிப்பதுடன், தலைமறைவாவதோ, சாட்சிகளைக் கலைப்பதோ கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் இருவருக்கும் பிணை வழங்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment