மூத்த பெரியார் பெருந்தொண்டர் 103 வயதாகும் சுங்கவரித்துறை துணை ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ. காந்திமதிநாதன் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து பல்வேறு இயக்கப் பணிகள் குறித்து நீண்ட நேரம் உரையாடினார். காந்திமதிநாதன் அவர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து இயக்க நிதியாக ரூ.5,000த்தை வழங்கினார். மோகனா வீரமணி அம்மையாருக்கும் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் அவரது குடும்பத்தினர் பயனாடை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: மதுரை மாவட்ட தோழர்கள் பழ. முருகானந்தம், வே.செல்வம், ராமசாமி, ராக்கு தங்கம், வா. நேரு, வி.பன்னீர்செல்வம் உள்ளனர்.
மதுரை நகரின் மய்யப்பகுதியில் இருந்த தந்தை பெரியார் சிலை அருகே மக்கள் பயன்பாட்டிற்காகவும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் மேம்பாலம் கட்டும் பணியை அரசு மேற் கொண்டது. அப்போது தந்தை பெரியார் சிலையை அகற்றி, வேறு இடத்தில் வைப்பதற்கு அரசு இடம் ஒதுக்கியுள்ளது. அந்த இடத்தினை தமிழர் தலைவர் பொறுப்பாளர்களுடன் சென்று பார்வையிட்டார். மதிமுக சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: மதிமுக அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் மு. செந்திலதிபன்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் முனைவர் வா. நேரு, எழுத்தாளர் கோ. ஒளிவண்ணன், எழுத்தாளர் நா. ஆனந்தம், சுப.முருகானந்தம், செல்வ. மீனாட்சிசுந்தரம், புதுச்சேரி வீ. இளவரசி சங்கர், திருப்பத்தூர் கவிதா, பழனி தமிழ்ஒவியா, குடந்தை சேதுராமன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
மதுரை அழகர் அவர்களின் சகோதரர் மாரி மறைந்ததையொட்டி அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மதுரை அழகர் வீட்டிற்குச் சென்ற தமிழர் தலைவரிடம் அழகர் குடும்பத்தினர் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கினர்.
No comments:
Post a Comment