கோவை, ஜன. 5- மாற்றுத்திற னாளி மகனுடன் ஆதர வின்றி தவித்த பெண் ணுக்கு, வீடு கேட்டு மனு அளித்த 24 மணி நேரத் துக்குள் வீடு ஒதுக்கி, அதற்கான ஆணையை கோவை மாவட்ட ஆட் சியர் வழங்கினார்.
கோவை செட்டிபா ளையத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்து வபுரத்தைச் சேர்ந்தவர் ஷீலா (44). இவரது கணவர் கோபால் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் னர் உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு ராமசாமி (14) என்ற மகன் உள்ளார். மாற்றுத் திறனாளியான இவர் தாயார் உதவியுடன் வாழ்ந்து வருகிறார். கணவர் மறைவுக்கு பிறகு ஷீலா தங்க இடம் இல் லாமல் அவதிப்பட்டுள் ளார். அப்போது பெரியார் நினைவு சமத்துவபுரத் தைச் சேர்ந்த மணியம் மாள் (63) என்ற மூதாட்டி ஆதரவின்றி தவித்த ஷீலா வுக்கும், அவரது மகனுக் கும் மனிதநேயத்துடன் தன் வீட்டிலேயே அடைக் கலம் கொடுத்தார்.மகனை கவனிக்க வேண்டியிருந்த தால் ஷீலாவால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அரசு தரும் மாற்றுத் திறனாளி நல உதவித் தொகையை ஷீலா பயன் படுத்தி வந்தார். தவிர, மணியம்மாள் தனியார் உணவகத்தில் மாதம் ரூ.6,500 ஊதியத்துக்கு பாத்திரம் கழுவும் வேலைக் குச் சென்று ஷீலாவையும், அவரது மகனுக்கும் உதவி வந்தார். பின்னர் வயது மூப்பின் காரணமாக கடந்த நவம்பரில் இருந்து மணியம்மாள் வேலைக்கு செல்லவில்லை. 4 ஆடுகள் வாங்கி அதை மேய்ச்ச லுக்கு விட்டு, பராமரித்து கிடைக்கும் தொகையை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இதற்கிடையே, தனது காலத்துக்கு பிறகு மேற் கண்ட இருவருக்கும் உரிய வசிப்பிடம் இருக்காது என்பதை உணர்ந்த மணி யம்மாள், ஷீலா மற்றும் அவரது மகனை அழைத் துக்கொண்டு வாராந்திர மக் கள் குறைதீர்ப்பு முகாம் நடந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு வந்தார்.
அவர் களுக்கு வீடு ஒதுக்க வலியு றுத்தி ஆட் சியரிடம் மனு அளித்தார். வீடு ஒதுக்கி அதற்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.
No comments:
Post a Comment