ஜனவரி
01.01.2022 - தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் விடுதலை பணித் தோழர்கள் புத்தாண்டு வாழ்த்து
01.01.2022 - பகுத்தறிவாளர் கழக அமைப்புகளின் மாநில கலந்துரையாடல் கூட்டம்
03.01.2022 - "பா.ஜ.கவின் ஏழு ஆண்டுகள் ஆட்சியும் அதன் தேர்தல் ரகசியமும்" - தமிழர் தலைவர் சிறப்புரை (காணொலி)
11.01.2022 - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரியார் திடலில் கழகத் தலைவர் ஆசிரியருடன் ‘நீட்’, இடஒதுக்கீடு குறித்து உரையாடல்.
16.01.2022 - சென்னை பெரியார் திடல் - தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் திராவிடர் திருநாள் சிறப்புக் கருத்தரங்கம்.
30.01.2022 - மதவெறி கண்டன நாள் - ‘மண்டலும் கமண்டலும்’ எனும் தலைப்பில் (காந்தியாரின் படுகொலை நினைவு நாளில்) காணொலி வாயிலாக சிறப்புக் கூட்டம். தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை.
பிப்ரவரி
03.02.2022 - அறிஞர் அண்ணா 53 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மலர் வளையம் வைத்து மரியாதை.
05.02.2022 - காந்தியார் நினைவு நாளில் கோட்சே பெயரைக் குறிப்பிடக் கூடாது என்று கோவை காவல் துறையினர் தடை செய்ததையும், குவாலியரில் கோட்சே - ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருதுகள் வழங்குவதையும் கண்டித்து தமிழ்நாடு தழுவிய அளவில் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்.
07.02.2022 - மடாதிபதி பட்டணப்பிரவேசம் - மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை மட ஆதீனம் பட்டணப்பிரவேசம் - கழகத் தோழர்கள் மறியல் கைது
18.02.2022 - 1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு - 94ஆம் ஆண்டு விழா தந்தை பெரியார் சிலையை காணொலி வாயிலாக தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்து சிறப்புரை.
24.02.2022 - சிதம்பரம் - தில்லை நடராசர் கோவிலில் வழிபட சென்ற ஆதி திராவிடர் பெண்ணை கோவில் தீட்சிதர்கள் இழிவுபடுத்தியதைக் கண்டித்து கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
மார்ச்
07.03.2022 - இனமானப் பேராசிரியர் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்- பேராசிரியர் இல்லத்தில் அவர் படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தல்.
08.03.2022 - உலக மகளிர் நாளில் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், அன்னை மணியம் மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு.
10.03.2022 - சென்னை - அன்னை மணியம்மையாரின் 103ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா - கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் அன்னை மணியம்மையார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிப்பு. - பெரியார் திடலில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை, அன்னை மணியம்மையார், தந்தை பெரியார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை - தமிழர் தலைவர் உறுதிமொழி கூற கழகத் தோழர்கள் சூளுரை - கருத்தரங்கம் நடைபெற்றது.
14.03.2022 - நீதிமன்றங்களும், சமூகநீதியும் எனும் தலைப்பில் சென்னை பெரியார் திடலில் சிறப்புக்கூட்டம் - தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை.
16.03.2022 - அன்னை மணியம்மையார் நினைவு நாள்- கழக மகளிரணி, மகளிர் பாசறை உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பெரியார் திடலிலிருந்து ஊர்வலமாக சென்று பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
19.03.2022 - திராவிடர் கழகத் தலைமைப் பொறுப்பேற்று 45 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.
31.03.2022 - சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ‘ஆளுநர் மாளிகையா? சனாதன மடமா?’ என்ற தலைப்பில் கண்டனப் பொதுக் கூட்டம் - மத்தியப் பல்கலைக் கழகங்களில் கட்டாய நுழைவுத் தேர்வா? திராவிட மாணவர் கழகம் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஏப்ரல்
12.04.2022 - சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் - கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிறைவுரை.
14.04.2022 - அண்ணல் அம்பேத்கரின் 132ஆம் ஆண்டு பிறந்த நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் சென்னை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள அண்ணலின் சிலைக்கு மாலை.
25.04.2022 - சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் 03.04.2022 அன்று நாகர்கோயிலில் தொடங்கிய ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு 21 நாள்கள் பரப்புரைப் பெரும்பயண நிறைவுநாள் சிறப்புப் பொதுக்கூட்டம். கழகத் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர் தலைவரை Ôகருத்தியலின் தலைவர்Õ என பாராட்டுரை.
27.04.2022 - சர்.பிட்டி.தியாகராயரின் 171 ஆண்டு பிறந்தநாள் -சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன் பில்டிங்) - சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மலர் மாலை.
29.04.2022 - சென்னை - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் - சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை.
29.04.2022 - புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் 41ஆம் ஆண்டு தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா - சென்னை பெரியார் திடலில் சென்னை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
30.04.2022 - தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்
30.04.2022 - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து இந்தி எழுத்துகளை தார் கொண்டு அழிக்கும் போராட்டம் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில். கழகத் தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், தோழர் களும் கைது செய்யப்பட்டனர். போருக்கு செல்லும் தந்தைக்கு மகன் வழியனுப்புவதாக தோழர் இரா.முத்தரசன் உரை
மே
01.05.2022 - சென்னை பெரியார் திடலில் திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் 2022ஆம் ஆண்டுக்கான மாணவர் கழக களப் பணிகள், அமைப்புப் பணிகள், இயக்க ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.
08.05.2022 - மன்னார்குடி ஜீயர். “அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நடமாட முடியாது” என்பா? மன்னார்குடி பெரியார் சிலை அருகில் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்.
09.05.2022 - நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பணியாளர்கள் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு - கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்
11.05.2022 - சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி ஆதிக்கம் - திராவிட மாணவர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்.
24.05.2022 - ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ் புறக்கணிப்பு - வடவர் ஆதிக்கம்- கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்.
29.05.2022 - சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் ஜாதி, மத மறுப்பு இணை தேடல் நிகழ்ச்சி Ôமன்றல் பெருவிழாÕ
31.05.2022 - சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்திக்க வந்த பேரறிவாளனை அன்புடன் ஆரத் தழுவி வரவேற்றார்.
ஜூன்
01.06.2022 - உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை’யின் 88ஆம் ஆண்டு தொடக்கம் - கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் பணியாளர்கள் விடுதலையின் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
03.06.2022 - முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைக்குத் தமிழர் தலைவர் மரியாதை
04.06.2022 - சென்னை பெரியார் திடலில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்கு வனார் தலைமையில் நடைபெற்றது.
04.06.2022 - மாலை 6:00 மணி அளவில் சென்னை சைதாப்பேட்டை, தேரடித் திடலில் நடராஜன் - தாளமுத்து நினைவரங்கில் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.
16.06.2022 - சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
19.06.2022 - செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன் விழா நிறைவு மாநாடு. கண்காட்சி - தீர்மான அரங்கம் - பேரணி - பகுத்தறிவு அறிவியல் கருத்தரங்கம், மந்திரமா? தந்திரமா? என சிறப்புடன் நடந்தது. ப.க. புரவலர் தமிழர் தலைவர் நிறைவுரை.
25.06.2022 - மதுரையில் கழகப் பொதுக்குழு கூட்டம் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தொடக்கவுரை. 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜூலை
03.07.2022 - பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு விழா - பெரியார் படிப்பகம் திறப்பு விழா! - கழகத் தலைவர் ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் பங்கேற்பு
10.07.2022 - கோலாலம்பூரில் மலேசிய திராவிடர் கழகத்தின் 76 ஆம் ஆண்டு தேசியப் பேராளர் மாநாடு
11.07.2022 - ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு இயக்கம் - அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் ஆசிரியர் 10 ஆண்டுகளுக்கான சந்தா தொகை பெற்றுக்கொண்டார்.
25, 26.07.2022 - “விடுதலை’யின் எதிர்நீச்சல்” எனும் தலைப்பில் காணொலி சிறப்புக் கூட்டங்கள். 25.07.2022 அன்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், 26.07.2022 அன்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு தொடக்கவுரை- தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை.
30.07.2022 - அரியலூர் - திராவிடர் கழக இளைஞரணி - மாநில மாநாடு.
ஆகஸ்ட்
10.08.2022 - 60ஆம் ஆண்டில் ‘விடுதலை’ ஆசிரியராக நமது தலைவர் - பணித் தோழர்கள் வாழ்த்து!
27.8.2022 - சென்னை பெரியார் திடலில் 88 ஆண்டு ‘விடுதலை’யின் 60 ஆண்டு கால ஆசிரியருக்குப் பாராட்டு விழா
28.08.2022 - மன்றல் - 2022 - பெரியார் சுயமரியாதைத் திருமணம் சார்பில் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார்.
செப்டம்பர்
4.9.2022: திருவாரூர் - சனாதன எதிர்ப்பு, 'திராவிட மாடல்' விளக்க திறந்த வெளி மாநாடு. தமிழர் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் முழக்கம்.
6.9.2022 காலை: சென்னை - பெரியார் திடலில் கழகத் தலைவர் தலைமையில் கழகத் தலைமைச் செயற்குழு - சிறப்புக் கூட்டம்.
மாலை: 88 ஆண்டுகால 'விடுதலை' ஏட்டின் 60 ஆண்டுகால ஆசிரியருக்குப் பாராட்டு விழா - 'விடுதலை' சந்தா வழங்கும் விழா - தமிழர் தலைவர் ஏற்புரை. ஆசிரியரின் வாழ்விணையருக்கு நன்றி - பாராட்டு! அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற சிறப்பு!
17.9.2022: சென்னை பெரியார் திடலில் (சிறுகனூர் - திருச்சி) தமிழர் தலைவர் தலைமையில், பெரியார் உலகம் அடிக்கல் நாட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாப் பேருரை. கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அய்யா - அம்மா - சுயமரியாதைச் சுடரொளிகள் நினை விடங்களில் கழகக் குடும்பத்தினர் மரியாதை. மலேசிய நாட்டில் நடைபெற்ற சிறப்பான பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு.
25.9.2022: கனடா - டொரண்டோ நகரம் - பெரியார் பன்னாட்டு அமைப்பின் மனிதநேய சமூகநீதி மாநாடு. உலகம் முழுவதிலுமிருந்து பேராளர்கள் - பகுத்தறிவாளர்கள் பங்கேற்பு. தமிழ்நாட்டிலிருந்து பயணித்தவர்களை தமிழர் தலைவர் வாழ்த்தி வழியனுப்பினார். தமிழ்நாடு முதல மைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் எழுச்சியுரை. தமிழர் தலைவருக்கு 'மனித நேய சாதனையாளர் விருது'
30.9.2022 - தஞ்சை - பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் - பெரும்புலவர் பேராசிரியர் சித்திரக்குடி ந.இராம நாதன் நூற்றாண்டு விழா - உருவப் படத்தினைத் திறந்து தமிழர் தலைவர் உணர்ச்சிப் பேருரை.
அக்டோபர்
8.10.2022: சென்னை பெரியார் திடல், கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் தலைமைச் செயற்குழுக் கூட்டம் - தமிழர் மேம்பாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றம்.
9.10.2022: தி.மு.க. தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் நினைவிடங் களில் மரியாதை. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முதலமைச்சருக்குப் பொன்னாடை அணிவித்து, நூல்களை வழங்கி சிறப்பு.
12.10.2022: மதவெறிக்கு எதிராக சென்னையில் அனைத்துக் கட்சி - சமூக அமைப்புகளின் மனித சங்கிலிப் போராட்டம். கழகத் தலைவர் ஆசிரியர் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்பு.
14.10.2022: ஈரோடு - திராவிடர் கழக முதல் பொருளாளர் பழையகோட்டை ந.அர்ச்சுனன் நூற்றாண்டு விழா - கழகத் தலைவர் விழாப் பேருரை. அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு.
25.10.2022: - சென்னை - பெரியார் திடல், கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் 'கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு' செயல்முறை விளக்கம். கர்ப்பிணிப் பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்பு.
29.10.2022: பஞ்சாப் மாநிலம் - பர்னாலா நகரில் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் அமைப்பின் (திமிஸிகி) 12ஆவது தேசிய மாநாடு. தமிழ்நாட்டிலிருந்து தோழர்கள் பங்கேற்பு.
நவம்பர்
8.11.2022: சென்னை - அப்போலோ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக இருந்த கழகத் தலைவர் ஆசிரியரிடம் - தொலைப்பேசியில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று கழகத் தலைவரிடம் நலம் விசாரித்தார்.
23.11.2022: தாராபுரம் அண்ணா சிலை - முப்பெரும் விழா - தமிழர் தலைவர் சிறப்புரை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உரை. 'விடுதலை' சந்தா வழங்கல்.
24.11.2022: சென்னை - கலைஞர் அரங்கம் - அண்ணா அறிவாலயம் - தத்துவ மேதை டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூல்களை வெளியிட தமிழர் தலைவர் பெற்றுக் கொண்டார். பல்துறை அறிஞர்கள் விழாவில் பங்கேற்பு.
25.11.2022: சென்னை - வள்ளுவர் கோட்டம் - "வேதங்கள், இதிகாசங்கள் பற்றி பல்கலைக்கழகங்களில் கருத்தரங்கம் நடத்தச் சொல்லுவதா?" கண்டன ஆர்ப்பாட்டம். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் முன்னிலை. தமிழ்நாடு தழுவிய அளவில் பல நகரங்களில் திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.
26.11.2022: வட சென்னை - திருவொற்றியூர் - ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் - கழகத் தலைவர் ஆசிரியர் பேருரை! நவ.25, 26, 27, 28 ஆகிய நாள்களில் தமிழ்நாடு முழுவதும் 64 பெருநகரங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்.
27.11.2022: சென்னை - தந்தை பெரியார் நினைவிடத்தில தமது 45ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை. கழகத் தலைவர் ஆசிரியர் வாழ்த்து.
டிசம்பர்
1.12.2020: சென்னை - சைதை பனகல் மாளிகை - தமிழர் தலைவர் தலைமையில் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு அனுமதி வழங்காத ஆளுநரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
2.12.2022: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை - பாராட்டுரை. அனைத்துக் கட்சித் தலைவர்கள் வாழ்த்துரை. ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு - பெரியார் பன்னாட்டமைப்பின் "சமூகநீதிக்கான
கி.வீரமணி விருது". பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.25 இலட்சம் நன்கொடை.
14.12.2022: தமிழ்நாடு அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் - நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை. தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்க நூல்களைப் பரிசாக வழங்கி - பொன்னாடை அணிவித்துத் தமிழர் தலைவர் மகிழ்ச்சி!
மிசோராம் மாநில மேனாள் ஆளுநர் ஆ.பத்மநாபன் 94ஆம் ஆண்டு பிறந்த நாளில் - தமிழர் தலைவர் நேரில் சந்தித்து வாழ்த்து.
17.12.2022: திருப்பத்தூர் - சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா - கழகத் தலைவர் 90ஆவது பிறந்த நாள் விழா - தமிழர் தலைவரின் 60 ஆண்டு 'விடுதலை' ஆசிரியர் பணியைப் பாராட்டி 'விடுதலை' சந்தா வழங்கும் விழா - என முப்பெரும் விழா. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி. மற்றும் தலைவர்கள் கருத்துரை - பாராட்டுரை. 'விடுதலை' சந்தா வழங்கப்பட்டது. நிறைவாக ஆசிரியர் ஏற்புரை.
18.12.2022: சென்னை பெரியார் திடல் -இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிப் பேருரை. பேராசிரியர் வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சியை முதலமைச்சர் முன்னிலையில் கழகத் தலைவர் திறந்து வைத்து - விழாவில் எழுச்சியுரை. அனைத்துக் கட்சித் தலைவர்கள் உரை.
20.12.2022: சென்னை - பெரியார் திடல் - நீதிக் கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள் - கருத்தரங்கம் - தமிழர் தலைவர் நிறைவுரை. பல்துறை அறிஞர்கள் கருத்துரை. முன்னதாக - சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மரியாதை.
22.12.2022: சென்னை - பெரியார் திடல் - தமிழர் தலை வரின் வழிகாட்டு அமர்வில் திராவிட இயக்க சிந்தனையா ளர்கள் - பன்னாட்டாளர்கள் பெருந்திரள் சங்கமம்.
24.12.2022: தந்தை பெரியார் நினைவு நாள் - திருச்சி, திண்டுக்கல்லில் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு கழகத் தலைவர் மாலை. கம்பம் - முப்பெரும் நிகழ்ச்சி - திறந்த வெளி மாநாடு- தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் உரை.
சென்னையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் அமைதி ஊர்வலம். தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை - உறுதிமொழி ஏற்கப் பட்டது. கருத்தரங்கம் நடைபெற்றது.
No comments:
Post a Comment