சென்னை, ஜன.2 சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை வரும் 13ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சேப்பாக்கத்தில் உள்ள சுற்று லாத்துறை தலைமை அலுவ லகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் ‘சென்னை சங்கமம்’, ‘நம்ம ஊரு திரு விழா’ குறித்து பத்திரிகையாளருடன் சந் திப்பு நடைபெற்றது. இதில் சுற்று லாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது:
புத்தாக்கத்துடன்...
கலை பண்பாட்டுத்துறை சார் பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி, இது நம்ம ஊரு திருவிழாவாக இணைந்து ஒரு புத்தாக்கத்துடனும், புத்துணர்ச்சி யுடனும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி துவங்கி, 17ம் தேதி வரை சென்னையில் நடைபெறவிருக் கிறது. ஏறுதழுவல், சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி, பொங்கல் திருவிழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நிலையில் அதில் மிக முக்கியமாக ‘சென்னை சங்கமம்’, ‘நம்ம ஊரு திருவிழா’ நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழி ஒருங்கிணைப்பில் நடை பெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட் டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும், 7 மண்டலங்களாக இருக்கக் கூடிய சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளடக்கியுள்ள எல்லா இடங்களிலும், இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற விருக்கிறது.
இந்த நிகழ்ச்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
இதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருப்பதாவது:
தீவுத்திடலில் ஜன. 13ஆம் தேதி இந்த நிகழ்வுகள் தொடங்கும். அதனை தொடர்ந்து, 14ஆம் தேதி யிலிருந்து, சென்னையில் இருக்கக் கூடிய பல்வேறு பூங்காக்கள், விளையாட்டுத்திடல்கள் என 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மாலை நேரங்களில் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சி களோடு சேர்த்து உணவுத் திரு விழாவும் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு பகுதிகளில் இருக்கக் கூடிய நம்முடைய பாரம்பரிய உணவுகள், அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் அதிகமாக விரும்பக்கூடிய உணவுகள், சென் னைக்கு அதிகம் பழக்கம் இல்லாத உணவுகள், இவை அனைத்தையும் கொண்டு வந்து உணவுத் திருவிழா வையும் இணைத்து நடத்த இருக்கிறோம்.
இதில், திரைப்பட இசைக்கலை ஞர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது குழுவினர் இந்த நிகழ்சியினை ஒருங்கிணைத்து தரவுள் ளனர். இந்த கலைநிகழ்ச்சியில் 700 கலைஞர்கள் கலந்து கொள் வார்கள்.
பொதுமக்கள் இலவச மாக நிகழ்ச்சிகளை பார்வையிடலாம். தீவுத்திடலில் கடந் தாண்டு நடந்த உணவுத்திருவிழாவில் மாட்டுக்கறி சர்ச்சை ஆனது.
ஆனால் உணவு என்பது ஒரு தனிப்பட்ட முடிவு, அதை சர்ச்சை யாக மாற்ற வேண்டிய அவசிய மில்லை. இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment