கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்-12,000 பேர் வேலை நீக்கம் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை மின்னஞ்சல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்-12,000 பேர் வேலை நீக்கம் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை மின்னஞ்சல்

நியூயார்க் ஜன, 23- பிரபல இணைய தள நிறுவனமான கூகுள் நிறு வனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 வேலைகளை குறைக்கும் என சுந்தர்பிச்சை மின்னஞ்சலில் ஊழியர் களுக்கு தகவல்  தெரிவித்துள்ளார்.  உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு பிரபலமான பல நிறுவனங்கள்  ஆட்குறைப்புகளை செய்து வரும் நிலையில்,, கூகுளும் 12 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்து மற்ற தொழில்நுட்ப நிறு வனங்களுடன் இணைகிறது..

கரோனா பெருந்தொற்றால், ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இன்னும் உயராத நிலையிலேயே தொடர்கிறது. இதனால் பெரும் பாலான உலக நாடுகள் கடுமை யாக திண்டாடி வருகிறது. இதன் பாதிப்பு பெரும் நிறு வனங்களிலும் எதிரொலிக்கிறது. இதனால் மைக்ரோ சாப்ட், அமேசான் உள்பட பல நிறுவ னங்கள் ஆட்குறைப்பு நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் வர்த்தக சரிவு காரணமாக, 12,000 பேரை ஆட் குறைப்பு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்,  தனது பணியாளர்களுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், ” கடினமான செய்திகளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். 

நிறுவனத்தின் மொத்த பணி யாளர்களில் தோராயமாக 12,000 ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். நாங்கள் உறுதியுடன் கடினமாக உழைத்து, பணியமர்த்த விரும்பி, நம்ப முடியாத திறமை வாய்ந்த சிலரி டம் இருந்து விடை பெறுகி றோம். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணியாளர்க ளின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னைப் பெரிதும் பாதிக்கிறது. 

இதற்கான, முழுப் பொறுப் பையும் நானே ஏற்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment