புதுடில்லி, ஜன. 2 உயர்நீதிமன்றங்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 537 நீதிபதிகளில் 11 சதவீதத்தினர்மட்டுமே பிற் படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதித் துறை சார்பில் சட்டம்-நீதி சார்ந்த நாடா ளுமன்ற நிலைக் குழுவிடம் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவரும் பீகார் மேனாள் துணை முதல மைச்சருமான சுஷீல் மோடி தலைமையி லான அக்குழுவிடம் நீதித் துறை சார்பில் கூறப்பட்டதாவது:
கடந்த 2018 முதல் 2022 வரை நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 537 நீதி பதிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பழங் குடியினத்தைச் சேர்ந்தவர்கள் 1.3 சதவீதத் தினர். தாழ்த்தப்பட்டவகுப்பைச் சேர்ந்த வர்கள் 2.8 சதவீதத்தினர். 11 சதவீத நீதிபதிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த வர்கள். சிறுபான்மை சமூகங் களைச் சேர்ந்த நீதிபதிகள் 2.6 சதவீதம்.
20 நீதிபதிகளின் சமூகப் பின்னணி சார்ந்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. நீதிபதி களை நியமிப்பதற்கான முதன்மைப் பொறுப்பை கொலீஜியம் அமைப்பு ஏற்று 30 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகங் களையும் சேர்ந்தவர்களுக்கு இன்னும் சமவாய்ப்பு கிடைக்கவில்லை. நீதிமன்றங் களில் சமூகப் பன்முகத்தன்மை நிலவுவது தொடர்ந்து தாமதமடைந்து வருகிறது.
நீதிபதிகள் நியமனத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத் துவம் அளிக்க வேண்டிய பொறுப்பு கொலீ ஜியத்துக்கே உள்ளது. அந்த அமைப்பு அளிக்கும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே ஒன்றிய அரசின் பணி. அதைக் கருத்தில்கொண்டு, நீதிபதிகளை நியமிக்கும்போது பழங்குடியினர், தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு முக்கியத் துவம் அளிக்குமாறு கொலீஜியம் அமைப்பை ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறது என்று நீதித் துறை சார்பில் தெரி விக்கப்பட்டது.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி பின்னர் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (என்ஜேஏசி) தொடர்பாகவும் இந்தக் கூட்டத் தின்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment