பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

மதுரை, ஜன. 21- மதுரை மாவட்டத்தில் உள்ள சி.இ.ஒ.ஏ பள்ளியில் பெரியார் ஆயிரம் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில தலைவர் முனைவர் வா.நேரு, தென்மண்டல அமைப்பு செயலாளர் வே.செல்வம், மாவட்ட துணை செயலாளர் இரா.சுரேசு, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்  மதுரை மாவட்டத்தில் மத்திய கலால் மற்றும் சுங்கவரித்துறை அலுவலர்களின் கூட்டமைப்பின் மூலம் நடைபெற்று வரும் பள்ளியின் தாளாளரும், சிறந்த பெரியார் பற்றாளருமான  கிளைமாக்ஸ் ராஜா ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

மதுரை மாவட்டத்தில் தனபால் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் ஆயிரம் தேர்வு எழுதி வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு மதுரை மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் பழக்கடை அ.முருகானந்தம் . பகுத்தறிவு எழுத்தாளர் மன் றத்தின் மாநில தலைவர் முனைவர் வா.நேரு.தென்மண்டல அமைப்பு செயலாளர் வே.செல் வம், மாவட்ட துணை செயலாளர் இரா.சுரேசு.  பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெ.தினேஷ் மற்றும் தாளாளர் த.ஜெயராஜ் ஆகியோர் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

மதுரை மாவட்டத்தில் தேவசகாயம் மேல் நிலைப்பள்ளியில் பெரியார் 1000 தேர்வு எழுதி  வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் மதுரை மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் பழக்கடை அ.முருகானந்தம், பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில தலைவர் முனைவர் வா.நேரு, தென்மண்டல அமைப்பு செயலாளர் வே.செல்வம்,  மாவட்ட துணை செயலாளர் இரா.சுரேசு , மற்றும்  பள்ளியின் தலைமை ஆசிரியர், உடன் தென்மண்டல பிரச் சார செயலாளர் மற்றும் பள்ளியின் தாளாளர் தே.எடிசன் ராசா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment