பழனி, டிச. 13-- பழனியில் சுயமரியாதை நாள்(டிச-2), ‘சுயமரியாதைச் சுட ரொளி' இரா.சேது அவர்களின் நினைவுநாள்(டிச.-10), ஜாதி ஒழிப்பு மாவீரர் நாள்(நவ..-26) முப்பெரும் நிகழ்வுகளின் விளக்கப் பொதுக் கூட்டம் தந்தை பெரியார் திடலில் 10.-12.-2022 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில் நடை பெற்றது.
பழனி மாவட்டத் தலைவர் மா.முருகன் தலைமையேற்றார், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் தொடக்கவுரையாற் றினார்.
மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் சே.மெ.மதிவதனி, கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
இந்நிகழ்வில் மாநில அமைப்புச் செயலாளர்கள் வே.செல்வம், வி.பன்னீர்செல்வம், ஈரோடு த.சண் முகம், மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், பழனி நகர் மன்ற மேனாள் தலை வர் வரத.இராஜமாணிக்கம் (சிபி எம்) முன்னிலை வகித்தனர்.
ப.க மாவட்டத் தலைவர் ச.திராவிடச் செல்வன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா. வீர பாண்டி, புலவர். வீரகலாநிதி, மெர்சி ஆஞ்சலாமேரி சி. இராதா கிருட்டிணன், பா.வெற்றிச் செல் வன், தாராபுரம் மாவட்டச் செய லாளர் ஆ.முனீஸ்வரன் மற்றும் பழனி, திண்டுக்கல், தாராபுரம் பகு தியைச் சேர்ந்த கழகத் தோழர்கள் மற்றும் தி.மு.க., வி.சி.க.,ம.தி.மு.க., த.மு.மு.க., ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி., தமிழ்ப்புலிகள் கட்சி, எஸ்டிபிஅய்., திராவிட இயக் கத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல் வேறு கட்சியைச் சேர்ந்த தோழர் கள், கலந்து கொண்டனர். இறுதி யாக க.மதனபூபதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment