அபிநய் லட்சுமணன்
இந்திய தேர்தல் ஆணையர்களின் நியமனத் திற்காக நடுநிலையான கொலிஜியம் போன்ற தொரு அமைப்பை உருவாக்குவது பற்றிய உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றுக் கொண் டிருக்கும் போது, அது பற்றி ஓய்வு பெற்ற தலைமை தேர்த்ல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி மற்றும் ஜகதீப் எஸ். சோக்கர் ஆகியோரிடம் மேற்கொள் ளப்பட்ட விவாதத்தின் தமிழாக்கம் வருமாறு:
இந்திய தேர்தல் ஆணையர்களின் நியமனத் திற்காக நடுநிலையான கொலிஜியம் போன்ற தொரு அமைப்பை உருவாக்குவது தேவையா?
எஸ்.ஒய். குரேஷி: ஆம், தேவைதான். இது பற்றி நான்நீண்ட காலமாக எழுதிக் கொண்டும், ஊடகங்களில் பேசிக் கொண்டும் வந்திருக்கிறேன். அவ்வாறு செய்வது பொது மக்களிடையே மேலும் கூடுதலான நம்பிக்கையை ஏற்படுத்தும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அந்த கொலிஜியம் அமைப்பில் இருப்பது ஆணை யர்கள் நியமனத்திற்காக தேர்ந்து எடுக்கும் நடைமுறைக்கு மேலும் மதிப்பைக் கூட்டவே செய்யும். அவருடன் இந்திய தலைமை நீதிபதியும் அதில் இருப்பது அவசியம். தேர்தல் ஆணையர் நியமனத்தில். எதிர்க்கட்சித் தலைவர் கையெழுத்து இட்டிருப்பது மேலும் முக்கியத்துவத்தைத் தரும் என்பதால் அது மிகமிக முக்கியமானதாகும்.
ஜகதீப் எஸ். சோக்கர் : கொலிஜியம் பற்றி குரேஷி கூறியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதில் பிரதமர், எதிர்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் ஒன்று அல்லது இரண்டு வேறு நபர்களும் இருக்கலாம். அகன்ற அடிப்படை கொண்ட கலந்து ஆலோசிக்கும் நடைமுறை மேலானதாக இருக்கும். முன்னாட்களில் தேர்தல் ஆணையர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்பது தெரியாமலேயே அன்றைய அரசு நியமனம் செய்து வரும் தற்போதுள்ள நடைமுறை யுடன் அதனை ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. எனவே. அவ்வாறு செய்யப்படும் எந்த ஒரு மாற் றமும் மிகமிக பயன் நிறைந்ததாகவே இருக்கும்.
இப்பகுதியில் சீர்திருத்தம் செய்வதற்கு அரசின் எதிர்ப்பு இது வரை உச்சநீதிமன்ற எல்லைக் குள்ளாகவே இருந்து வந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக அத்தகைய சீர்திருத்தத்தை அரசுகள் எதிர்த்துக் கொண்டே வந்துள்ளன. அதைப்பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
எஸ்.ஒய். குரேஷி: ஆம், நாங்கள் அரசுக்கு எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம். கடந்த 20 - 25 ஆண்டுகளில் நானும், எனக்கு முன் இருந்த தேர்தல் ஆணையர்களும் இது பற்றி எழுதி உள்ளோம். ஆனாலும் அரசு சீர்திருத்தங்களை தடுத்து நிறுத்திக் கொண்டுதான் வந்துள்ளன. இதன் காரணமே, தங்களிடம் உள்ள இந்த அதி காரத்தை இழந்து விட எந்த அரசும் விரும்பாது என்பதே ஆகும். அதனால்தான் அவர்கள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. 2006 இல் நான் தேர்தல்; ஆணையராக நியமிக்கப் பட்டபோது, பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் என்னிடம், "கொலிஜியம் என்பது ஒரு நல்ல கருத்துதான் என்றும், இனியும் அதனைத் தவிரக்க இயலாது என்றும், பழைய நடைமுறையில் செய்யப்படும் கடைசி நியமனம் உங்களுடைய தாகத்தான் இருக்கும் என்றும் பிரதமர் என்னிடம் கூறினார்" என்று கூறினார். ;
என்ன காரணத்தாலோ அது நடைபெறாமல் போய்விட்டது. இந்தத் பிரச்சினையைப் பார்க்கும் நீதித்துறை அதிகாரத்தைப் பொறுத்தவரை, அரச மைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக விளங்கும் சுதந்திரமான, நியாய மான தேர்தல் நடத்தப்படுவதற்கான பொறுப்பு அரசமைப்பு சட்ட பாதுகாவலரான உச்சநீதி மன்றத்துக்கு உள்ளது. சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்து கொள்வது என்று வரும்போது உச்சநீதிமன்றம் முதன்மையானதாக வருகிறது. எப்படி இருந் தாலும், தேர்தல் ஆணையர் நியமன நடைமுறை மற்றும் அது போன்ற பொருள் பற்றியும் அரச மைப்பு சட்ட 324 ஆவது பிரிவின்படி நாடாளு மன்றம் ஒரு சட்டத்தை இயற்றவேண்டும் என்று கடந்த 72 ஆண்டுகளாக உச்சநீதி மன்றம் சுட்டிக் காட்டி வந்துள்ளது. எனவே, இதனைச் சுட்டிக் காட்டுவதற்கு உச்சநீதிமன்றத்துக்கு எல்லா அதி காரமும் உள்ளது. எப்படி இருந்தாலும், உச்சநீதி மன்றம் தானாக முன்வந்து இந்தப் பிரச்சினையை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசின் செயலற்ற தன்மையை எதிர்த்து உச்சநீதி மன்றத்துக்குச் சென்ற மக்களின் பொதுநல வழக்குகள் நிறை யவே இருந்தன. எனவே. இது பற்றி கேள்வி கேட்டு தீர்ப்பு அளிப்பதற்கான முழு உரிமை உச்சநீதி மன்றத்துக்கு உள்ளது. 72 ஆண்டுகளாக அரசு ஏன் தூங்கிக் கொண்டு இருக்கிறது? அத்தகைய ஒரு சட்டத்தை ஏன் அவர்கள் இதுவரை நிறைவேற்றவில்லை?
ஜகதீப் எஸ். சோக்கர் : அதன் காரணம் நன்றாகவே தெரிகிறது. அரசு தலையீடு இன்றி தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று அரசமைப்பு சட்டம் வலியுறுத் துவதற்கு மாறாக அதன் மீது முழுக் கட்டுப் பாட்டைத் தன்னிடமே வைத்துக் கொண்டி ருக்கவே அரசு விரும்புகிறது. ஒரு விதத்தில் தேர்தல் ஆணையம் இதனை எதிர்க்கவில்லை. தேர்தல் ஆணையத்தாலும், கடந்த 25-30 ஆண்டு களில் அரசினா லேயே நியமிக்கப்பட்ட பல குழுக்கள் மற்றும் ஆணையங்களாலும் நிறைய செயல்திட்ட ஆலோசனைகள் வழங்கப்பட் டுள்ளன. அதுவுமன்றி இதுபற்றி பல சட்ட ஆணையங்களின் அறிக்கைகளும் இருந்தன. அரசமைப்பு சட்டத்தின் செயல்பாட்டைப் பற்றி மறு ஆய்வு செய்வதற்கான ஆணையத்தின் அறிக்கை ஒன்றும் இருந்தது. அதற்கும் முன்னர் திரும்பிச் சென்று பார்த்தால், கோஸ்வாமி குழு அறிக்கை போன்ற பல அறிக்கைகளும் இருந்தன. இவ்வாறு அரசினால் நியமிக்கப்பட்ட ஆணையங் களும் குழுக்களுமே அவ்வாறு கூறியுள்ளன. என்றாலும், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, தேர்தல் ஆணையத்தின் மீது கட்டுப்பாடு வைத்திருக்கவும், எவரையும் கலந்தாலோசிக் காமல் தேர்தல் ஆணையர்களை நேரடியாக நிய மனம் செய்யவுமான அதிகாரங்களைத் தன்னி டமே வைத்திருக்கவும் விரும்பின. அரசின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுவதற்கான துணிவை தலைமை தேர்தல் ஆணையரோ அல்லது மூன்று தேர்தல் ஆணையர்களோ பெற்றிராததை உறுதிப்படுத்திக் கொள்ளவே அரசு விரும்புகிறது. இப்போதிருக்கும் முழுப் பிரச்சினையும் இதுதான்.
தேர்தல் ஆணையர்களில் இருந்து பதவி உயர்வின் மூலம் தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவது வழக்கமாக ஆகிவிட்டது. இதனால் ஏற்படும் அதிகாரப் போட்டி என்ன? தேர்தல் ஆணையர்களும், தலைமை தேர்தல் ஆணையரும் தனித்தனியாக நியமனம் செய்த வழக்கு ஏதேனும் உள்ளதா?
எஸ்.ஒய். குரேஷி: தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையர்கள் பணி நியமனம் மற்றும் அவர்கள் ஆற்றும் பணிகள்) பற்றி உருவாக்கப் ;பட்ட 1991 ஆம் ஆண்டு சட்டம் இயற்றுவதற்கு அரசமைப்பு சட்டத்திலோ அல்லது வேறு எந்த ஒரு சட்டத்திலோ இடமில்;லை. பதவி ஏற்றுக் கொள்ளும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், தேர்தல் ஆணையர்களுக்கும் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று அதன் 4 ஆவது பிரிவு குழப்பம் ஏதுமின்றி தெளிவாகத் தெரிவிக்கிறது.
இவர்களில் எவராவது ஆறு ஆண்டு பதவிக் காலம் முடியும் முன்னரேயே 65 வயதை எட்டி விட்டால், அவர்கள் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்ற உபவிதியும் உள்ளது. இதில் உள்ள தந்திரம் என்னவென்றால், கடந்த ஆண்டுகளில் அரசு பெற்ற பேரறிவின் காரணமாக, தங்களது 65 ஆவது வயதை எட்டுவதற்கு முன் ஆறு ஆண்டு பணிக் காலம் இல்லாதவர்களை தேர்தல் ஆணையர் களாக அரசு நியமித்து வருவதில்தான் உள்ளது. அதன்படி அவர்கள் 65 வயதை எட்டிய வுடன் தேர்தல் ஆணையராகவோ அல்லது உயர்ந்த அளவு தலைமை தேர்தல் அதிகாரி யாகவோ ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் இருந்தபின் ஓய்வு பெறுவார்கள். ஆனால் ஒரு 58 வயதுக் காரரையோ அல்லது 59 வயதுக் காரரையோ தேர்தல் ஆணையராக ஏன் அரசு நியமிக்கக் கூடாது என்று அரசமைப்பு சட்டத் திலோ அல்லது வேறு எந்த சட்டத்திலேயோ குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை. அவ்வாறு 58 அல்லது 59 வயதுக்காரரை தலைமைத் தேர்தல் ஆணையராகவோ அல்லது தேர்தல் ஆணைய ராகவோ ஏன் அரசு நியமிக்கக் கூடாது? எனவே, எந்தப் பதவியில் பணிபுரிந்தாலும் அது பணி மூப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற பாரம்பரியம் அநேகமாக அதிகார வர்க்கத் தினால் கட்டமைக்கப்பட்டது என்பது நன்றாகவே தெரிவதாக உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர்களின் தகுதியோ சிவில் பணி பணிமூப்பின் அடிப் படையில் அமைவது அல்ல. அவர் ஒரு வழக் குரைஞராக இருக்கலாம், அல்லது ஒரு நீதிபதி யாகவோ இருக்கலாம். இதன் பொருள் என்ன வென்றால் அது விதியின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதேயாகும். இதற் காகக் கூறப்பட்ட காரணம், அவர்கள் மாவட்ட நீதிபதிகளாகவும், மற்;ற அதனைப் போன்ற பதவி களிலும்; இருந்தபடியால், தேர்தல்கள் நடத்துவதில் வேறு எவரையும் விட அதிக அனுபவம் பெற்ற வர்களாக இருப்பார்கள் என்பதுதான். அதைப் போன்ற விவகாரங்களைக் கையாளும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கூட சரியான வயதில் நியமிக் கப்படலாம். இதன் நோக்கமே, அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தங்களைத் தொடமுடியாது என்ற நம்பிக்கையை தேர்தல் ஆணையருக்கு அல்லது தலைமை தேர்தல் ஆணையருக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்.
அதனால்தான் பாரம்பரியம் எனப்படும் நடைமுறையோ அல்லது வேறுநடைமுறையோ பின்பற்றப்படும்போது, பணிமூப்பு என்பது மிக மிக முக்கியமானது, ஆனால், சிவில் பணியா ளர்களிடையேயும், பணிமூப்பு அளவுகோல் அவ்வப்போது பின்பற்றப்படுவதில்லை. ஆனால், பணிமூப்பு என்னும் கொள்கை புனிதமானது அல்ல. எனவே, தேர்தல் ஆணையருக்கு அல்லது தலைமை தேர்தல் ஆணையருக்கு குறிப்பிட்ட ஆறு ஆண்டு காலப் பணி அளிக்கப்படவேண்டும் என்பது மிகமிக முக்கியமானது. உச்சநீதி மன்றத்தின் அரசமைப்பு சட்ட அமர்வு தானாகவே இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டது குறித்து நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தேர்தல் ஆணையர்களுக்கு, இடையூறு இல்லாமல், குறிப்பிட்ட ஆறு ஆண்டு கால பதவி அளிக்கப்பட வேண்டும் என்ற அந்த விவகாரம் மிகமிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். தேர்தல் ஆணையர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது என்று கூறுவது, உருவாக்கப்பட்ட மற்றொரு சூழ்நிலையாகும். அரசமைப்பு சட்டமோ அல்லது வேறு எந்த சட்டமோ எந்த இடத்திலும் அவ்வாறு கூறவே இல்லை. மூன்று தேர்தல் ஆணை யர்களுமே சமமானவர்கள்; :அவர்களது பணி மூப்பின்படி ஒருவர் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார்.
எஸ். ஒய். குரேஷி: உச்சநீதி மன்றத்திலும் கூட முக்கியமான பணிமூப்புக் கொள்கை பின்பற்றப் பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவர்களது குறுகிய பதவிக் காலம் அவரது சுதந்திரமான செயல்பாட்டை பாதிப்பது இல்லை. 1993 முதல் நாம் பல தேர்தல் ஆணையர்களைக் கொண்டிருக்கிறோம் என்பதையும், தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் இரண்டு பதவிகளிலும் மொத்தமாக ஆறு ஆண்டு பதவிக் காலம் இருக்கிறதா அல்லது ஓய்வு பெறும் வயது முதலில் வருகிறதோ அப் போது பதவி விலகவேண்டும் என்ற காரணத்தால் தான் ஏற்படுவது இந்த குறைந்த பதவிக் காலம்.
பதவி நீக்கத்தில் இருந்து அத்தகைய பாது காப்பு தேர்தல் ஆணையர்களுக்கும், தலைமை தேர்தல் ஆணையருக்கும் தனித் தனியாக அளிக்கப்படுவதனால், ஒரு தேர்தல் ஆணையர் தனது பதவிக் காலமான ஆறு ஆண்டு நிறை வடைந்தபின் தலைமை தேர்தல் ஆணையராக நீடிக்கும் நிலை குறிப்பிடத்தக்க அளவில் சிக்கல் நிறைந்ததாக ஆகிவிடவில்லையா?
எஸ். ஒய். குரேஷி: ஆமாம், அதனால்தான் பதவி நீக்கத்தில் இருந்து பாதுகாப்பு தலைமை தேர்தல் ஆணையருக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என்றும் மற்ற தேர்தல் ஆணையர் களுக்கு வழங்கப்படக் கூடாது என்றும் நாங்கள் கூறுகிறோம். 1993 ஆம் ஆண்டு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது செய்யப்பட்ட ஒரு தவறுதான் அது. இவ்வாறு பாதுகாப்பு அளிப்பது தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல, ஓர் அமைப் புக்கானது என்றும் அது தானாக வரவேண்டும் என்பதாகவும் இருந்திருக்க வேண்டும். இந்த அமைப்பு முன்னர் ஓர் உறுப்பினர் அமைப்பாக இருந்தது. இப்போது அது மூன்று உறுப்பினர் அமைப்பாக இருக்கிறது. எனவே அந்த பாதுகாப்பு மூன்று ஆணையர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
நன்றி: 'தி இந்து' 03-12-2022
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.
No comments:
Post a Comment