புதுடில்லி, டிச. 10- தமிழ்நாட் டில் உள்ள பழங்குடியி னர் பட்டியலை மாற்றி அமைப்பதற்காக நாடா ளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள பழங் குடியினர் பட்டியலில் புதி தாக ஜாதிகளை சேர்த்து, பட்டியலில் மாற்றம் செய்ய கோரிக்கை முன் வைக்கின்றன.
அதை அமலுக்கு கொண்டுவர ஒன்றிய அரசு அவ்வப்போது நாடா ளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு, கரு நாடகா, இமாசலபிரதே சம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலை மாற்றி அமைக்க அந்தந்த மாநில அரசுகள் விடுத்த வேண் டுகோளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது.
அதையொட்டி, அரசி யல் சட்ட (பழங்குடியினர்) ஆணை திருத்த மசோ தாவை நாடாளுமன்ற மக் களவையில் ஒன்றிய பழங் குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தாக்கல் செய்தார். 4 மாநி லங்களுக்கும் 4 தனித்தனி மசோதாக் களை அவர் தாக்கல் செய்தார்.
No comments:
Post a Comment