கிருட்டினகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப் கிருட்டினகிரி பெரியார் மய்யத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்து அதற்கான ரசீதை மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், கா.மாணிக்கம், துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திமுக கிருட்டினகிரி (மேற்கு) மாவட்ட துணைச் செயலாள ரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான பி .முருகன் மற்றும் அவரது இணையர் ஜெயபிரபா குடும்பத்தின் சார்பில் கிருட் டினகிரி பெரியார் மய்ய படிப்பகத்திற்கு ரூபாய் 75 ஆயிரத் திற்கான காசோலையை மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினர். மேலும் கட்டடத்திற்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மின்சார சாதனங்கள் வழங்குவதாக வும் உறுதியளித்துள்ளார். உடன் மாவட்ட தலைவர் த. அறிவர சன், செயலாளர் கா. மாணிக்கம், துணைத் தலைவர் வ. ஆறு முகம், மாவட்ட பகுத்தறிவு பகுத்தறிவாளர் கழக தலைவர் ச. கிருஷ் ணன், தோழர் ஆ.கோ. இராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment