தமிழ்ப் பல்கலை.யில் தொல்காப்பியர் இருக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

தமிழ்ப் பல்கலை.யில் தொல்காப்பியர் இருக்கை

தஞ்சாவூர்,டிச.31-  தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதி நல்கையாக 

ரூ.1 கோடி முதலீட்டில் தொல்காப்பியர் இருக் கை நிறுவ புரிந்துணர்வு ஒப்ப ந்தம் செய்துகொள்ளப்பட்டது.   இந்த ஒப்பந்தம் 01.01.2023 முதல் 31.12.2025 வரை மூன்று ஆண்டு காலத்திற்கானதாகும்.  தமிழ்ப்பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேரா.சி.தியாகராஜன் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேரா.ரா.சந்திரசேகரன் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டனர்.  

ஒப்பந்தத்தின்படி தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப் பியர் இருக்கை நிறுவப்பட்டு, சிறந்த தகைசால் பேராசிரியர் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், ஆய்வு உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுத் தொல்காப்பியம் குறித்து முழுமையாக மூன்றாண்டுகளுக்கு ஆராயப்படவுள்ளது. இவ்விருக்கையின் வாயிலாகத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் தொல் காப்பியம் குறித்த பயிலரங்குகளும், கருத்தரங்குகளும் இலக் கணத்தில் ஆழங்கால்பட்ட ஆய்வறிஞர்களைக் கொண்டு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.   ஆண்டிற்கு மூன்று முறை இப்பயிலரங்கம் நடத்தப்பெறும் எனவும், பயிலரங் கிற்குத் தெரிவு செய்யப்பட உள்ளவர்களுக்கு முறையான இலக்கணப் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment