வெறும் வயிற்றுடன் எவரும் படுக்கைக்குச் செல்லக்கூடாது: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

வெறும் வயிற்றுடன் எவரும் படுக்கைக்குச் செல்லக்கூடாது: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடில்லி, டிச.7- யாரும் வெறும் வயிற் றுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது; நாட்டில் உள்ள அனைவருக்கும் உண வளிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்று உச்சநீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்த பட்ட போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டனர். அவர்களின் அவல நிலை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சி னைகள் தொடர்பான பொது நலன் மனுவை (பிஅய்எல்) சமூக ஆர் வலர்கள் அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஷ் மந்தர், ஜக்தீப் சோக்கர் ஆகிய 3 பேர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந் தனர். அவர்களுக்காக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர். ஷா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனது வாதத்தில் பிரசாந்த் பூஷண் கூறியதாவது: 

நாட்டில் தேசிய உணவுப் பாது காப்புச் சட்டம் (என்எப்எஸ்ஏ) அமலில் உள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக, அமல் படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் புலம்பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். இந்தச் சட்டம் அமலில் இருந்தபோதும் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு கிடைக்காமல் போனது. 

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜென ரல் அய்ஸ்வர்யா பாட்டி கூறியதாவது: என்எப்எஸ்ஏ சட்டத்தின் கீழ் 81.35 கோடி பேர் பயன் பெறுகின்றனர். பொது மக்களுக்குத் தேவையான உணவு தானியங்களை ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மூலமாக நியாய விலைக் கடைகளில் வழங்கி வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இரு தரப்பு வாதத்துக்குப் பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: 

நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு உள்ள அடிப்படை உரிமை யாகும். நாட்டில் உள்ள யாரும் வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லக் கூடாது என்பது நமது கலாச்சாரம். எனவே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், நாட்டில் உள்ள அனை வருக்கும் உணவு கிடைக்கிறதா என் பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இது ஒன்றிய அரசின் கடமையாகும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு எதை யுமே செய்யவில்லையென்று நாங்கள் கூறவில்லை. கரோனா தொற்றின்போது நாட்டு மக்களுக்கு தேவையான உணவு தானியங்களை ஒன்றிய அரசு வழங் கியதை நாங்கள் அறிவோம். அதே நேரத்தில், இது தொடர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

-இவ்வாறு அவர்கள் கூறினர். 

பின்னர் இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.

No comments:

Post a Comment