தொண்ணூறு வயது
தொடும்
தொண்டறமே மனிதமே
வாழ்க வாழ்க
விடுதலை நாம் பெற
உழைத்திடும்
தேனீயே
ஆற்றல் மிகு தலைவரே
ஆசிரியரே
வாழ்க வாழ்க.
30 சி சட்டம் தந்த
முத்தமிழே
வாழ்க வாழ்க.
ஜாதி மதம் ஒழித்திட
சளைக்காமல் போராடும்
சனாதன எதிர்ப்பாளரே
வாழ்க வாழ்க.
எதிர்ப்புகள் வந்தாலும்
எதிர்கொள்ளும் ஆற்றல்
நிதானம் தவறாது சிந்தித்து செயலாற்றும்
பக்குவமும் அறிவும்
நாணயமும் பெற்றவரே
எங்கள் தலைவரே
வாழ்க வாழ்க.
அய்யா பெரியாரின்
அன்பான சீடரே
அறிவுச் சுடரேற்றி
அகிலம் வியக்க நாளும்
நாத்திகம் பகுத்தறிவு
பரப்பி வரும் இளைஞரே
விடுதலை ஆசிரியரே
வாழ்க வாழ்க.
பெரியார் வழியில் நீங்கள்
உங்களைத் தொடர்ந்து
நாங்கள்
சிறக்க ட்டும் பெரியாரியம்
வளரட்டும்
மனிதநேயம்
ஒழிய ட்டும்
சனாதனம்
தொடரட்டும்
ஆசிரியர் தொண்டு.
காணட்டும்
நூறாண்டு.
மகிழ்ந்திடுவோம்
மனம் குளிர.
வாழ்க தமிழர்தலைவர்.
- ச. மணிவண்ணன் திருச்சி மண்டல திராவிடர் கழக செயலாளர், துறையூர்
No comments:
Post a Comment