சென்னை,டிச.14- கால்பந்து வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டுள் ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பு வருமாறு, சென்னையில், தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக மாநில அளவிலான கால்பந்து வீரர் - வீராங்கனைகள் தேர்வு (State Level Selection Trials for Football- Boys & Girls) இடம் மற்றும் நாள் மாற்றப்பட்டுள்ளது.
திருச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 15.12.2022 அன்று மாணவியருக்கான தேர்வு மற்றும் 16.12.2022 அன்று மாணவர்களுக்கான தேர்வு நடைபெற வுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment