பிச்சாண்டார்கோவில் திருமதி காமாட்சி கலியபெருமாள் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 3, 2022

பிச்சாண்டார்கோவில் திருமதி காமாட்சி கலியபெருமாள் மறைவு

கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் - ஆறுதல்

திருச்சி மாவட்டம், பிச்சாண்டார் கோவிலைச் சேர்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்ட ரும், கழகம் நடத்திய பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற கொள்கை வீரருமான, மானமிகு தோழர் கலியபெருமாள் அவர்களது வாழ்விணையர் திருமதி காமாட்சியம்மாள் அவர்கள் நேற்றிரவு (2.12.2022) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். மறைந்த தோழர் பிச்சை அவர்களது நெருக்கமான நண்பர் தோழர் கலியபெருமாள் அவர்கள்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் போன்றவர்கள் அவ்வூருக்கு வரும் போதெல்லாம் அவருக்கு விருந்து உபச்சாரம் முதல் பலவும், ஏனைய தோழர்களுக்கும் அவ்விதமே செய்யும் பண்பாளர் மறைந்த அம்மையார்!

வாழ்விணையரை இழந்து, துயரம் அடைந்து, வருந்தும் தோழர் கலியபெருமாள் மற்றும் குடும்பத் தினர் அனைவருக்கும், கழக உறவுகளுக்கும் நமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கி றோம்.

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

3.12.2022

சென்னை


No comments:

Post a Comment