தமிழர் தலைவர் ஆசிரியரின் 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து மனநிறைவுடன் திருச்சி வந்து சேர்ந்தோம். பல குடும்ப உறவுகளையும், நண்பர்களையும் 3 ஆண்டுகள் கழித்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. பயணங்கள் மதுரை, கீழடி, பெங்களூரு, தருமபுரி என்று நீண்டு கொண்டே உள்ளன. பழைய, புதிய கழகத்தோழர்களை கண்டு அளவளாவி மக்களுக்கு நலன் பயக்கும் பகுத்தறிவு திட்டங்களைப் பற்றி பேசினோம். முக்கியமாக இளைஞர்களின் பங்கு எவ்வாறு இருக்கவேண்டும் ஆராய்ந்தோம்.
11.12.2022 அன்று திருச்சியில் நாகம்மையார் இல்லத்தில் குழந்தைகளுடன் இனிய விருந்து உண்ணும் முன், கழக இளைஞர்கள் கலந்துரையாடலில், படித்து பட்டம் பெற்ற கழகத்தோழர்களுக்கு வேலை கிடைக்காத குறையை முன் வைத்தார்கள்.
எனக்கு வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரியில் வழங்கிய வேலை வாய்ப்பு திட்டங்கள் நினைவுக்கு வந்தது. அத்திட்டங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் இரண்டு ஆண்டுகள் ஆகியும் வரவில்லை என வருத்தத்துடன் சொன்னார்கள். பிறகு குழந்தைகளுடன் இனிய உணவருந்தி மகிழ்ந்தோம். மொத்தத்தில் தமிழ் நாடு முழுதும் பசுமைப் பொழில் கண்களை கவர்ந்து குப்பைகள் குறைந்து மனதிற்கு நிறைவை தந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர் சரோஜா இளங்கோவன்
(அமெரிக்கா)
No comments:
Post a Comment