சென்னை,டிச.6- தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
உலகத் தமிழர்களிடையே நாட் டுப்புறக் கலைகளை கொண்டு செல்லும் நோக்கிலும், இளம் தலை முறையினர் நாட்டுப்புற கலைவடி வங்களின் சிறப்பை அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப்புற கலைக்கு அங்கீகாரம் அளிக்கவும், சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரமாண்ட கலைவிழாக்கள் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தும் வகை யில் 5 நிமிட காட்சிப்பதிவை குறுந்தகடு அல்லது பென்டிரைவில் பதிவு செய்து, டிச. 13-க்குள் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். கலை பண்பாட் டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தகுதியானவர்கள் தேர்வு செய் யப்பட்டு, சென்னையிலும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளிலும் நடை பெறும் ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.
ஒரு குழுவில் இடம்பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக் கூடாது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண் ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, ராணிப் பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட கலைஞர்கள் காஞ்சிபுரம் உதவி இயக்குநர் அலுவலகத்திலும், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மாவட்ட கலைஞர்கள் சேலத்திலும், தஞ்சாவூர், நாகப்பட் டினம், திருவாரூர், கடலூர், விழுப் புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டத்தினர் தஞ்சாவூரிலும், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரி யலூர், பெரம்பலூர் மாவட்டத் தினர் திருச்சியிலும் உள்ள உதவி இயக்குநர் அலுவலகங்களில் வழங்க லாம்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராம நாதபுரம், சிவகங்கை மாவட்டத் தினர் மதுரையிலும், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியா குமரி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருநெல்வேலியிலும், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் கோயம்புத்தூரிலும் உள்ள உதவி இயக்குநர் அலுவலகங்களில் தங்கள் காட்சிப் பதிவுகளை வழங்கலாம்.
No comments:
Post a Comment