பக்தியின் யோக்கியதை இதுதானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

பக்தியின் யோக்கியதை இதுதானா?

''மூடநம்பிக்கையிலிருந்து வெளியே வாருங்கள்'' என்று கூறிய நடிகர் மீது செருப்பு வீச்சு!

பெங்களூரு, டிச. 22  “வீடுகளுக்கு முன்பு தொங்கவிட்டு இருக்கும் ‘அதிர்ஷ்ட தேவதை’ படங்களால் ஒன்றும் நடக்காது, அதை விற்பவர் களுக்கு வேண்டுமென்றால் பணம் கிடைக்கும்” என்று கூறிய கன்னட திரைப்பட நடிகர் மீது செருப்பு வீசப்பட்டது

கன்னட திரைப்பட நடிகர் தர்சன்: இவர் மூடநம்பிக்கை மற்றும் பகுத்தறிவு கருத்துக்கள் குறித்து பொது மேடைகளில் அவ்வப்போது பேசி வருகிறார். மதநம்பிக்கையில் மூழ்கிக்கிடக் கும் கருநாடகம் போன்ற மாநிலங்களில் இவர் எதைப்பேசினாலும், ஹிந்து மதத்திற்கு எதி ரானவர் என்று ஹிந்து அமைப்புகள் பரப்புரை செய்து இவர் மீது பழிசுமத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

இதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவரும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில் தர்சன் நடித்து உள்ள கிராந்தி(புரட்சி) என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத் தின் பாடல் வெளியீட்டு விழா விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நடந்தது. இதில் தர்சனின் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் தனது செருப்பை கழற்றி தர்சன்  மீது வீசினார். அந்த செருப்பு தர்சனின் தோள் பட்டையில் பட்டு கீழே விழுந்தது.

இது தொடர்பாக அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அதிர்ஷடத்தை நம்பும் ஒரு கன்னட நடிகரின் தீவிர ரசிகர் ஆவார். அவர் தனக்கு பிடித்த நடிகர்கள் ‘அதிர்ஷ்ட தேவதை’களை மதித்தனர். ஹிந்து மத நம்பிக்கைகளை அவர்கள் மதித்தனர். ஆனால் இவரோ ‘அதிர்ஷ்ட தேவதை’ குறித்து அது சக்தியில்லாத படம் என்றும், அதிர்ஷ்ட தேவதை படத்தை வாங்கி மாட்டினால் அந்த படம் விற்பனை செய்பவருக்குத்தான் லாபம் என்றும் கூறுகிறார். அப்படி என்றால் இவருக்கு முன்பும் இதை நம்பிய நடிகர்கள் எல்லாம் முட் டாள்களா என்று கேள்வி எழுப்பினார். 

நடிகர் தர்சன் மீது செருப்பு வீசப்பட்ட நிகழ்விற்கு நடிகர் சிவராஜ்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஒரு காணொலி வெளியிட்டு, தர்சன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் எனது மனதிற்கு வேதனை அளிக்கிறது. ரசிகர்கள், நடிகர்கள் யாரையும் அவமரியாதை செய் யக் கூடாது. இத்தகைய செயல்களில் இருந்து ரசிகர்கள் விலகி இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் பலர் நடிகர் தர்சனின் வீட்டுப்பெண் களை இழிவுபடுத்தி சமூகவலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து கன்னட நடிகை ரம்யா கூறியதாவது:

 ‘நடிகர்களின், ரசிகர் மன்றங்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். நடிகர்கள் தங்களது ரசிகர்களிடம் மற்ற நடிகர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவு செய்ய வேண்டாம் என்று கூற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளை இழிவுபடுத்தும் கருத்து களை சமூக வலைத்தளங்களில் யாரும் பதி விடாதீர்கள். எல்லா அவதூறுகளும், கேவல மான வார்த்தைகளும் பெண்களை குறிவைத்து பேசப்படுகின்றன. இத்தகையை சமூக வலைத் தள கணக்குகளை தடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment