ஆசிரியர் வீரமணியார் வாழ்க! வாழ்கவே!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

ஆசிரியர் வீரமணியார் வாழ்க! வாழ்கவே!!

பேராசிரியர். மு.நாகநாதன்

படிக்கக் கூடாது படிக்கவே கூடாது

சிலர் தான் படிக்க வேண்டும்.

யார் சொன்னது?

இது வேதத்தின் விதி

நாதனின் கட்டளை சனாதனம் தான் சட்டம் 

ஏற்றுக் கொள் அடங்கிப் போ

இது ஆண்டவன் இட்ட கட்டளை


ஆளுகிறவர்கள் நாங்கள்

அடி பணிந்து நிற்க

வேண்டியவர்கள் நீங்கள்

சிலரைக் கண்டு

பலர் அஞ்சினர்

இருபதாம் நூற்றாண்டு வரை

இதுதான் இந்தியா!


பெரியார் களம் கண்டார்

அண்ணல் அம்பேத்கர்  போராடு என்றார்

பலர்  திரண்டனர்

சிலர் அச்சம் கொண்டனர்

 

ஜாதியத்தை அடி அடி மேல் அடி

ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சியவர்களின்

ஆதிக்கத்தின் அடித்தளம் தளர்ந்தது!

மேல் தளத்தின் ஆதிக்கம் தொடர்கிறது


ஒரு நூற்றாண்டு இந்தச் 

சமூக நீதிப் பயணத்தில்

தியாகராயர். நடேசனார்

தார்வாத் மாதவ‌நாயர்

கண்ட நீதிக்கட்சி 

தந்தை பெரியார்

அமைத்த திராவிடர் கழகம்

அறிஞர் அண்ணா

நிறுவிய திராவிட முன்னேற்றக் கழகம்

கண்ட களங்கள் பற்பல.

வெற்றி பெற்று வருகிறோம்

பெற்ற வெற்றிகளைச் சீர் குலைக்கப்  

பாய்கிறது சனாதன ஆட்சி.


பெரியார் இல்லை. 

அண்ணா இல்லை.

கலைஞர்  இல்லை.

திராவிடச் செம்மல் 

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி

திராவிட இயக்க மாட்சியின் நீட்சி! 

திராவிட இயக்கக் கொள்கையின்

அரணாக, அரசாகப் பல போற்றத்தக்கப் 

பணிகளைத் தொடர்கிறது.

இடையூறுகள்

தடைகள் ஏற்படுத்தச்

சனாதன சங்கிகள் முயல்கின்றனர்‌.


ஆசிரியர் வீரமணியார்

90 அகவையைத் தொடுகிறார்

ஆசிரியர் வீரமணியார்

முதல் வீரராக. முதல் தளபதியாக

முதல் தலைவராக ஆதிக்கப்புரியினரின்

சதிச் செயல்களை இனம் காண்கிறார்.

முறியடிக்கக் களம் காண்கிறார்.

ஆயிரம்‌ஆயிரம் மைல்கள் பயணம்

பெரியார் போல் அயராத பயணம் .

ஆய்ந்த உரைகள்

அறிவைத் தூண்டும் உரையாடல்கள்

எழுச்சி ஊட்டும் கட்டுரைகள்

இயங்கிக் கொண்டே இருக்கிறார்.

தொடாத துறைகள் இல்லை

படிக்காத நூல்கள் இல்லை

80 ஆண்டுகள் தொண்டறம்

60 ஆண்டுகள் விடுதலை ஆசிரியர் பணி

வயதோ 90  உணர்வோ இளமை

ஆசிரியர் ஓர் இயங்கியல் மணி

எதிர்ப்புகளுக்கு அஞ்சா வீரமணி

மணி ஒலித்துக் கொண்ட இருக்கிறது

இது ஆலய மணியல்ல

அறிவு மணி. அன்பு மணி. பண்பு மணி

பகுத்தறிவு மணி. சுயமரியாதை மணி

எட்டுத் திக்கும். ஒலிக்கட்டும் ஆசிரியர் மணி

 சாயட்டும் சனாதனம்

ஓங்கட்டும் சமூக நீதி

வளரட்டும் சமத்துவம்

மலரட்டும் பொதுமை

வாழ்க! வாழ்க! வாழ்கவே

ஆசிரியர் வீரமணியார் வாழ்க!


No comments:

Post a Comment