மும்பை, டிச. 21, உலகம் முழுவதும், அரசாங்கம்தான் நீதிபதிகளை நியமிக் கிறது என்றும், வாய்ப்புக்கேடாக இந்தி யாவில் மட்டும் தான் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் வழக்கம் உள்ளது என்றும் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். உச்ச நீதிமன்றம் பிணை மனுக்களை விசாரிக்கக் கூடாது என்றும், அரசமைப்புச் சட்ட விவகாரங்களை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறி யிருந்தார்.
இந்நிலையில், மும்பை கருத்தரங் கில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு மறை முகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
“1975 ஆம் ஆண்டு அவசர நிலையின் போது மங்கலாகிப்போன சுதந்திர ஜோதியை எரிய வைத்தது ரானே போன்ற நீதிபதிகள்தான். அவசர நிலை காலத்தில், நீதிமன்றங் களின் ‘சுதந்திரம் குறித்த அச்சமற்ற உணர்வு’தான், ஜனநாய கத்தைக் காப்பாற்றியது. நமது நீதிமன்றங்களின் பாரம்பரியத்தின் அடிப்படையில், நீதிபதிகள் ஒன்றுகூடி உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததன் காரண மாகவே நமது இந்திய ஜனநாயகம் இன்று உறுதியுடன் நிலைத்து நிற்கிறது. நமது நீதிமன்றங்கள் தான் சுதந்திரத்தின் ஒளிவிடும் ஜோதி யாக திகழ்கின்றன. இனிமேலும் அப்ப டியே அவை நிலைத்து நிற்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “உச்சநீதிமன்றத்திற்கு சிறிய வழக்கு பெரிய வழக்கு என்றெல் லாம் இல்லை. அரசமைப்புச் சட்ட பாதுகா வலர் என்ற வகையில், இந்திய குடிமக்களின் சுதந்திரத்தைப் பாது காப்பதற்கான பொறுப்பு உச்சநீதிமன் றத்திற்கு உள்ளது. தனிநபர் சுதந்திரம் பாதிக்கப் படுமானால், அந்த விடயங் களில் தலையிடுவது உச்சநீதிமன்றத்தின் கடமை. இந்த நம்பிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து பாதுகாப்போம்” என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரி வித்துள்ளார்.
No comments:
Post a Comment