என்ன நடந்தது இடையில்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

என்ன நடந்தது இடையில்?

17.8.2017 அன்று உச்சநீதிமன்றத்தில் "நீட்" தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உச்சநீதிமன்றம் என்ன சொன்னது? "அடுத்த 22 ஆம் தேதி வரும் போது நீட்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், நீட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்புக்கு இட மில்லாமல் ஒரு திட்டத்தோடு வாருங்கள்" என்று சொன்னது.

அப்படியொரு திட்டத்தோடு 22ஆம் தேதி வந்தார்களா? அதுதான் இல்லை; அப்படியே ஒன்றிய அரசு அந்தர் பல்டி அடித்தது பாருங் கள். தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு ஆதரவு இல்லை என்றார் ஒன்றிய அரசின் வழக்குரை ஞர். தமிழ்நாடு அரசின் வழக்குரைஞரிடம் கருத்துக் கேட்காமலேயே உச்சநீதிமன்றமும் "ஓகே" என்று கூறிவிட்டதே- இடையில் 5 நாட் களில் நடந்தது என்ன?

No comments:

Post a Comment