கீவ், டிச 11 உக்ரைனில் நடந்து வரும் போர் ரஷ்யா-நேட்டோ போராக உருவெ டுக்கும் அபாயம் உள்ளதாக நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் எச்சரித் துள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் 28 அய்ரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ. உலகின் மிகவும் வலிமையான ராணுவ கூட்ட மைப்பாக அறியப்படும் இந்த அமைப்பில் இணைவதற்கு கிழக்கு அய்ரோப்பிய நாடான உக் ரைன் விருப்பம் தெரிவித்தது. நேட்டோவும் இதற்கு சம் மதம் தெரிவித்தது. இந்த சூழலில் உக்ரைன் நேட் டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அதன் அண்டை நாடான ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங் கியது. இன்னும் சில தினங் களில் இந்த போர் 11-ஆவது மாதத்தை எட்டவுள்ளது.
இந்த போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதியுதவி களை வழங்கி பக்கபலமாக இருந்து வருகின்றன. ஆனால் ரஷ்யாவோ உக்ரைன் போரில் அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் நேரடி யாகப் பங் கேற்பதாக குற்றம் சாட்டி வருகிறது.
ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக உக்ரை னுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புவது, உக்ரைன் வீரர் களுக்கு தங்கள் நாடுகளில் போர்ப் பயிற்சியளிப்பது, ரஷ்ய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு உளவுத் தக வல்கள் மற்றும் ஆலோசனை களை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் போரில் மேற்கத்திய நாடுகள் நேரடியாக பங்கேற்பதாக ரஷ்யா கூறுகிறது.
எனவே உக்ரைனில் நேட்டோ தளவாடங்கள் மற்றும் அந்த அமைப்பின் அதிகாரிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த தங்களுக்கு சட்டபூர்வ உரிமை உள்ளது என்றும் ரஷ்யா எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்து வரும் போர் தங்களது அமைப் புக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போராக உருவெடுப் பதற்கான அபாயம் உள்ள தாக நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் எச்சரித் துள்ளார்.
நார்வே நாட்டின் மேனாள் பிரதமரான ஜென்ஸ் அந்த நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து கூறிய தாவது:- உக்ரைனில் நடந்து வரும் போர் மிகவும் அபாய கரமா னது. அதில் ஒரு சிறு தவறு நேர்ந்தால் கூட நேட்டோ வுக்கும் ரஷியா வுக்கும் இடையிலான மிகப் பெரிய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் உள்ளது. அதனைத் தவிர்ப் பதற்கான அனைத்து நடவ டிக்கைகளையும் நாங்கள் மிகுந்த கவனத்துடன் மேற் கொண்டு வருகிறோம். தற் போது உக்ரைனில் மட்டும் நடைபெற்று வரும் சண்டை, அய்ரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் பரவி, முழுப் போராக உரு வெடுப்ப தற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். அதே வேளையில் அதனைத் தடுப்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டியதன் அவ சியத்தையும் யாரும் அலட் சியப்படுத்திவிடக் கூடாது. இவ்வாறு ஜென்ஸ் ஸ்டால் டன்பர்க் கூறினார்.
No comments:
Post a Comment