சத்துணவு மய்யங்கள் மூடப்படாது : அமைச்சர் கீதாஜீவன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

சத்துணவு மய்யங்கள் மூடப்படாது : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

சென்னை,டிச.6- தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று (5.12.2022) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மய்யங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெறு கின்றனர். பள்ளிதோறும் பயனாளிகள் எண்ணிக்கை அடிப்படையில், தற் போது சத்துணவு மய்யங்களில் காலிப் பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை நிரப்பபுள்ளிவிவரங்கள் கோரப்பட்டுள்ளன. 28 ஆயிரம் சத்துணவு மய்யங்களை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள் ளது. இந்த மய்யங்களை மூடும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை. பள்ளி, சத்துணவு மய்யங்களின் எண் ணிக்கை, பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. சத்து ணவுத் திட்டத்தை வலுப்படுத்தவும், தொடர் கண்காணிப்புக்காகவும்தான் அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதில் யாருக்கும் எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை. காலை உணவு திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்திட்டம் முதல மைச்சர் அலுவலகம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. அதுமட்டு மின்றி வரும் ஆண்டில் அத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அப்படியிருக்கும்போது, சத்துணவு மய்யங்களை எப்படி அரசுமூட முயற்சி எடுக்கும்? காலிப்பணியிடங்களை நிரப் பவும், சத்தான உணவை முறையாக வழங்கவும், தொடர் கண்காணிப்பை வலுப்படுத்தவுமே அரசு திட்ட மிட்டுள்ளது. 

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment