பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் நிலை துணைத் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஷ்மிதா சுக்லா நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் நிலை துணைத் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஷ்மிதா சுக்லா நியமனம்

வாசிங்டன், டிச. 11- அமெரிக் காவில் உள்ள 12 நிதி மண்டலங்களில் முக்கிய நிதி மண்டலமாக கருதப் படும் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் நிலை துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சுஷ்மிதா சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார்.

54 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஷ்மிதா சுக்லா காப் பீட்டு துறையில் அனுப வம் மிக்கவர். இவரது நியமனத்தை பெடரல் ரிசர்வ் அமைப்பின் ஆளு நர்கள் குழு அங்கீகரித்துள் ளதாக நியூயார்க் மத்திய வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித் துள்ளது நியூயார்க் ஃபெட் போன்ற பணி சார்ந்த அமைப்பில் பணி யாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் பெரு மைப்படுகிறேன்” என்று சுஷ்மிதா சுக்லா தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

மேலும், “எனது அனு பவங்கள் மற்றும் பாடங் களைக் கொண்டு வங்கி யின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், நிறுவனத்தின் வளர்ச்சிக் குத் தேவையான தலை மைப் பண்புடன் செயல் படுவேன்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment