கல்வி உதவித்தொகை பெற மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம்; மாவட்ட ஆட்சியர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

கல்வி உதவித்தொகை பெற மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோடு, டிச. 11- மாணவ -மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண் ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். 

இதுபற்றி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளி யிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- 

தமிழ்நாடு மற்றும் பிற மாநி லங்களில் உள்ள ஒன்றிய அரசுக் கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., என்.அய்.டி. மற்றும் ஒன்றிய பல்கலைக் கழகங் களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் மாணவ -மாணவிகள் ஒருவ ருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகையாக வழங்குவதற்கு தமிழ் நாடு அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது. மாணவ -மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

மேற்படி கல்வி உதவித் தொகைக்கு 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ -மாணவிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் களை அணுகியோ அல்லது லீttஜீs://தீநீனீதீநீனீஷ்.tஸீ.ரீஷீஸ்.வீஸீ/ஷ்மீறீயீsநீலீமீனீமீs.லீtனீ#sநீலீஷீறீணீக்ஷீsலீவீஜீ sநீலீமீனீமீs என்ற இணையதள முகவரியில் இருந்தும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கல்வி நிறுவனங்கள் மேலும் மேற் படி நிதி ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத் தினை மாணவ -மாணவிகள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறு வனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையாளர், பிற்படுத்தப் பட்டோர் நல இயக்ககம், எழிலகம், இணைப்புக் கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த  விண்ணப்பங்களை வருகிற ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல கத்தை அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.


No comments:

Post a Comment