கரோனா தொற்றால் பயப்பட தேவையில்லை: ஒன்றிய அரசின் நோய் தடுப்பு துறை தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

கரோனா தொற்றால் பயப்பட தேவையில்லை: ஒன்றிய அரசின் நோய் தடுப்பு துறை தகவல்

புதுடில்லி, டிச. 23- ‘‘சீனா உட்பட பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இந்தியா வில் பயப்பட தேவையில்லை. இங்கு இயற்கையான தொற்று மற்றும் தடுப்பூசி கலந்து நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது’’ என்று ஒன்றிய அரசின் நோய் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.

இதுகுறித்து, கோவிட் - 19 நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா 21.12.2022 அன்று கூறியதாவது:

இந்தியாவில் இயல்பான தொற்று மற்றும் தடுப்பூசி என 2 வகையில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. எனவே, சீனா உட்பட பல நாடுகளில் அதிகரித் துள்ள கரோனா தொற்றால் பயப்பட தேவையில்லை. சீனா வில் ‘ஜீரோ கோவிட்’ என்ற கொள்கையால் கடும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன. அதனால், அந்நாட்டில் இயற் கையான நோய் தொற்று, அதன் மூலம் ஏற்படும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. அத்துடன் சீனாவில் வழங்கப் படும் தடுப்பூசி எந்தளவுக்கு கரோனா தொற்றை குணமாக் குகிறது என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. அத்துடன், சீனாவில் பெரும்பாலான முதி யோருக்கு தடுப்பூசி வழங்கப் படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரண மாகவும் கரோனா தொற்றால் விரம் அடைந்து உள்ளன.

எனவே, இந்தியாவில் பதற் றம் அடைய தேவையில்லை. அதேவேளையில் முன்னெச் சரிக்கையாக இருப்பது புத்தி சாலித்தன மானது. மேலும், இந்த நேரத்தில் கரோனா வைர ஸின் திரிபுகளை தொடர்ந்து கண்காணித்து, புதிதாக தொற் றால் பாதிக்கப்பட் டோரை கண்டறிவது முக்கியம்.குறிப்பாக விமான நிலையங்களில் வந் திறங்கும் சர்வதேச பயணிகளுக்கு கோவிட் அறிகுறி இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி கரோனா திரிபுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment