ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 5.12.2022

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஆளுநர்களின் அதிகார அத்துமீறல் குறித்து நாடாளுமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் தெளிவாக வரையறுக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.

* எங்களது ஆட்சியை கவிழ்க்க மோடி சதி, தெலங் கானா முதலமைச்சர் கே.சி.ஆர். பகிரங்க குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எச்.ஏ. கல்லூரியின் முதல்வரை ஜெய் சிறீராம் என்று முழக்க மிடும்படி ஏபிவிபி கட்சியினர் வற்புறுத்தியுள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* கருநாடகாவின் வீரசைவ-லிங்காயத்துகள் டிசம்பர் 24 முதல் மூன்று நாள் மாநாடு நடத்த உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜாதி இட ஒதுக்கீடு மற்றும் குழுவின் தகுதியை முக்கிய கோரிக்கை களாக முன் வைப்போம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment