சமூக மேம்பாட்டுப் பிரிவான மைக்ரோலேண்ட் அறக் கட்டளை, குன்னூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங் களுடன் இணைந்து, ஆரோக்கியமான மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை முதல் நிலையான உணவு உற்பத்தி, நீர் மற்றும் மின் சேமிப்பு பற்றிய கருத்துக்கள் மற்றும் யோசனைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் இதன் பலதரப்பட்ட திட்டங்கள் உள்ளூர் சமூகங்களின் சூழல் சார்ந்ததாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, தமிழ்நாடு கல்வித் துறை மற்றும் கீஸ்டோன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து, 12.12.2022 அன்று நடத்திய சந்திப்பில் 10 தட்பவெப்ப நிலை பள்ளிகள் துவங்கப்பட்டன.
இதுகுறித்து இந்த அறக்கட்டளையின் அறங்காவலர் கல்பனா கார் கூறுகையில், எங்களது இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த தட்பவெப்ப நிலை பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு இடைநிலை ஆய்வக அணுகுமுறையுடன் செயல்படுத்தப்படுகிறது. சிறப்புப் பயிற்சி பெற்ற உள்ளூர் இயற்கைக் கல்வியாளர்கள், பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள வானிலை நிலையங்களின் மாதிரிகள் மூலம் இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மொபிடெக் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட இந்த தானியங்கு வானிலை நிலையங்கள் மற்றும் லேப் கிச்சன் கார்டன்கள், ஆற்றல் திறன் கொண்ட சாதனங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு சாதனங்கள் போன்ற அம்சங்களுடன் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான தட்பவெப்ப நிலை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட இந்த நிறுவல்கள், குழந்தைகள் நேரடியாக தங்களுக்குள்ளும், பெற்றோர் மற்றும் பெரியோர்களுடனும் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த உரையாடல்களில் ஈடுபடவும், அவர்களின் பள்ளி வானிலை முறைகளை கண்காணிக்கவும் உதவுகின்றன” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கல்வித்துறை துணை ஆய்வாளர் சுகுமார் பேசுகையில், “தமிழ்நாடு கல்வித் துறை, மைக்ரோலேண்ட் அறக்கட்டளை மற்றும் கீஸ்டோன் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு இடையேயான புதுமையான கூட்டாண்மையான தட்பவெப்ப நிலை ஸ்மார்ட் பள்ளிகளை துவங்குவதில் நீலகிரி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக பூமியில் உண்டாகும் தாக்கங்களை குறைப்பதற்கான முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல் என்பது எதிர்காலத்திற்கு தேவையான ஒரு செயலாகும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment