மத நம்பிக்கையும் சுதந்திரமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

மத நம்பிக்கையும் சுதந்திரமும்

(06-12-2022 'இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)

கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான போர் என்ற பெயரில், முடிவே இன்றி நீண்ட காலமாக நடந்து வரும் வழக்கு நீதிமன்றங்களின் மதிப்பு மிகுந்த காலத்தை வீணடித்து வருகிறது. நாட்டில் மக்களை ஏமாற்றி  மதமாற்றம் செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரும் பொது நல வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. தாங்கள் பின்தங்கிவிடக் கூடாது என்று  விரும்பிய குஜராத் மாநில அரசு, தனது மத மாற்றத் துக்கு எதிரான சட்ட விதிக்கு விதிக்கப்பட்டிருக்கும்  தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய் யப்படும் எந்த ஒரு மதமாற்றத்துக்கும் மாவட்ட நீதிபதியின் முன் அனுமதி பெறவேண்டும் என்ற  விதிதான் அது. குஜராத் மாநிலத்தின் 2003ஆம் ஆண்டு மதச் சுதந்திர சட்டத்தின் 5 ஆவது பிரி வுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் மிகச் சரியாகவே இந்த தடையை விதித்துள்ளது. இந்த சட்டம்  2021 ஆம் ஆண்டில் (திருமணத்தின் மூலம் மதமாற்றம்) என்று திருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் மத கலப்பு திருமணங்களின் மூலம் செய்யப்படும் மதமாற்றங்கள்  சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்படும் என்பது போன்ற மற்ற விதி களுக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.  முன் அனுமதி பெறவேண்டும் என்ற விதி, திரு மணமும் மதநம்பிக்கையும் ஒரு தனிப்பட்ட மனிதரின் விருப்பம் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்பதால், ஒரு மனிதரின் மத நம்பிக்கை அல்லது மத மாற்றத்தைப் பற்றி வெளிப்படுத்த  அவரை அது கட்டாயப்படுத்து கிறது என்று உயர்நீதிமன்றம்  குறிப்பிட் டுள்ளது.

5ஆம் பிரிவின்மீது விதிக்கப்பட்டதடை, மோசடியாகவோ  கட்டாயத்தாலோ செய்யப்படாத உண்மையான மதக் கலப்பு திருமணங்களையும் பாதிக்கிறது என்று குஜராத் வாதாடியது மிகவும்  ஆச்சரியமாக இருந்தது. முன் அனுமதி பெற வேண்டும் என்ற தேவை, மதமாற்றத்தின் உண் மையான தன்மை என்று ஏதேனும் இருந்தால், மதக் கலப்பு திருமணத்தின் விளைவு களைப்  பற்றி கேள்வி கேட்கும்  தேவையே இல்லாமல் செய்து விடுகிறது.

இந்தவிதி தானாக முன்வந்து மதமாற்றம் செய்து கொள்ள உதவி செய்கிறது என்று கூறும்  கட்டுக்  கதையை ஏற்றுக் கொள்பவர்கள்தான் எவரும் இல்லை. ஒரு கலப்பு மதத் திருமணம் நடந்து விட்டது என்ற உண்மையின் அடிப் படையில் எந்த சந்தேகமும்  எழுப்பப்படாத போதும், எந்த கேள்வியும்  கேட்கப்படாதபோதும் மட்டும்தான் மதசுதந்திரம் என்பது பாதுகாக்கப் படுகிறது. மதமாற்றம் செய்து கொள்ளும் ஒருவரது நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, சுதந்திரமாக மனசாட்சிப்படி செயல்படுவது மற்றும்  தனது  தனிப்பட்ட  ரகசியத்தை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை பறிப்பதாகும் என்று  சற்று பொது அறிவு பெற்ற எவராலும் கூறமுடியும். மேலும், உயர்நீதி மன்றம் விதித்துள்ள தடைக்கு எதிராக செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது. எனவே,  மதமாற்றங்களுக்கு  எதிரான பொதுநல வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, முன் அனுமதி பெறவேண்டும் என்ற  விதிக்கு  விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி கேட்கும் மாநில அரசின் மனுவுக்கான தேவையே  இல்லை.

இது ஒரு பெரிய பிரச்சினை என்ற அளவில், தேசிய அளவில் மதமாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசை நிர்ப்பந்திக்கும் அளவில் ஆசை காட்டியோ அல்லது கருணைப் பணி ஆகியவற்றின் மூலமோ மதமாற்றம் செய்யப்படுவது ஒரு தீவிரமான  பிரச்சினையாக இருக்கிறது என்பதை நீதிபதி 

எம்.ஆர்.ஷா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது. இந்த பிரச்சினையின் தீவிரத்தை அடையாளம் கண்டு, அப்படி ஏதேனும் இருந்தால், மத சுதந்திரத்தையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் பணியை அரசுகளிடமே விட்டுவிடுவதற்கு மாறாக,  நாடு முழுவதிலும் ஏராளமான மதமாற்றங்கள் மோசடி யாக நடைபெறுகின்றன என்ற மிகைப்படுத்தப் பட்ட குற்றச்சாட்டுகளை நீதி மன்றங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பது கேள்விக்குரிய ஒன்றே.

நன்றி: 'தி இந்து' 06-12-2022 

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment