தடையைமீறிய 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றமா?
வாசிங்டன்,டிச.9- தென் கொரி யாவின் படங்களை பார்த்ததாக 2 சிறுவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனையை வட கொரியா அரசு நிறைவேற்றி யுள்ளது.
வடகொரியாவில் வெளி நாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக் காட்சிகளுக்கு தடை என கட்டுப் பாடுகள் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
கடந்தாண்டு கிம் ஜான் உன்னின் தந்தை உயிரிழந்ததன் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மொத்தம் 11 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்ட நாட்களில் பொதுமக்கள் சிரிப்ப தற்குகூட தடை விதிக்கப்பட்டது. கடைகளுக்கு செல்லக் கூடாது. குடிக்கக்கூடாது என கட்டுப் பாடுகள் பலவகைகளில் விதிக்கப் பட்டன. அந்த மாதிரிதான் வட கொரியாவில் கடுமையான சட்ட திட்டங்கள் பின்பற்றப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் ஊடகங் களும் தென்கொரிய உளவு அமைப்புகளும் சொல்கின்றன.
சீனாவுடன் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வட கொரியா, அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோத னைகளை செய்து வருகிறது. இத னால் அந்நாட்டின் மீது பொருளா தாரத் தடைகள் விதிக்கப்பட்டுள் ளன. இதனால், நாட்டில் கடும் பஞ்சம், உணவுப் பொருள் தட்டுப் பாடு நிலவுவதாக கூட சொல்லப் படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ மாக தகவல்கள் வெளியாகவில்லை.
இணையதளங்களுக்கும் கடு மையான கட்டுப்பாடுகள் உள்ளன. அரசு அனுமதித்த இணையதளங் களுக்கு மட்டுமே செல்ல முடியும். அரசு தரப்பு அனுமதியின் பேரி லேயே செய் திகள் ஒளிபரப்பாகும். இப்படி பல கட்டுப்பாடுகள் உள் ளன. இதையும் மீறி வடகொரியாவின் அண்டை நாடும், பரம எதிரி நாடாகவும் உள்ள தென்கொரிய நாட்டு நாடகங்கள், சினிமாக்கள் வடகொரியாவில் பிரபலம் ஆகி வருகின்றன.
இதனால், தென்கொரிய டிராமா ஷோக்கள் ப்ளாஷ் டிரைவ் போன்ற கருவிகள் மூலமாக கடத் தல் முறையில் வடகொரியாவிற்குள் கொண்டு வரப்படுகின்றன. தண் டனையில் இருந்து தப்புவதற்காக யாருக்கும் தெரியாமல் பூட்டிய வீட்டிற்குள் இருந்து கொண்டு இத்தகைய காட்சிப்பதிவுகளை வடகொரிய மக்கள் பார்ப்பதாகவும் சொல் லப்படுகிறது.
ஒருவேளை வடகொரிய அரசு இதை கண்டுபிடித்தால் அப ராதம், சிறை தண்டனை, ஏன் மரண தண் டனை விதித்தாலும் ஆச்சர்யப்படு வதற்கு இல்லை. சமூக ஊடகங்களும் வடகொரியாவில் இல்லை என்ப தால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து வெளி உலகத்திற்கு தெரி யாது.
இந்நிலையில், தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் படங் களை பார்த்ததற்காக 16 மற்றும் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு மரண தண்டனையை வடகொரியா நிறைவேற்றியிருப் பதாக தகவல்கள் வெளியாகியுள் ளன. தென்கொரியாவின் மிக பிர பலமான தொடரான கே-டிரா மாக்கள் பார்ப்பதற்கு வடகொரியா வில் தடை உள்ளது. அதையும் மீறி இந்த தொடர்களை பார்த்த குற்றத்திற்காக இருவருக்கும் பொது வெளியில் மரண தண்டனை நிறை வேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதமே இந்த நிகழ்வு நடைபெற்று விட் டாலும் கடந்த வாரம்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment