‘நீதித் துறையையும் காவிமயமாக்கவே கொலீஜியம் அமைப்பை எதிர்க்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு’: கபில்சிபல் குற்றச்சாட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

‘நீதித் துறையையும் காவிமயமாக்கவே கொலீஜியம் அமைப்பை எதிர்க்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு’: கபில்சிபல் குற்றச்சாட்டு!

புதுடில்லி, டிச. 21,  உச்சநீதி மன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நியமனம் விடயத்தில், உச்சநீதி மன்ற கொலீ ஜியம் அமைப்புடன், ஒன்றிய பாஜக அரசு மோதல் போக்கை மேற்கொண்டு வருகிறது. நீதிபதி களை நியமிப்பதற்கு அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது என்று கூறி, கொலீஜியம் பரிந்துரை களை நிறுத்தி வைத்துள்ளது. ஒன்றிய அரசு - உச்சநீதிமன்றம் இடையிலான இந்த மோதல், அரசமைப் புச் சட்ட  சிக்கலாக மாறும் சூழ லும் எழுந்துள்ளது. இந்நிலை யில், நீதித்துறையை காவிமய மாக்கவும், ஹிந்துத்துவா சித்தாத்தம் கொண் டவர்களை நீதிபதிகளாக நியமிப்ப தற்காக வுமே, ஒன்றிய பாஜக அரசு, கொலீஜியத்தை எதிர்ப்பதாக மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியா ளர்களுக்கு கபில்சிபல் பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் கூறியி ருப்பதாவது: 

“நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளையும், ஒன்றிய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு போய் விட்டது. எல்லா துறைகளிலும் அவர்களுடைய சித் தாந்தம் கொண்ட ஆட்கள்தான் முக்கியப் பொறுப்புகளில் இருக்கி றார்கள். இவ்வாறு இருக்கையில் நீதித்துறை யைக் கைப்பற்றி, அதிலும் பாஜக வினருக்கு தேவையான ஆட்களை நியமித்தால் அது ஜன நாயகத்திற்கு ஆபத்தானதாக அமைந்துவிடும். 

ஆளும் பாஜகவின் சித்தாந் தத்தை (ஹிந்துத்துவா) கொண்டவர்கள் தான் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக இருக் கிறார்கள். மாநிலங்களில் ஆளுநர் களாக இருக்கிறார்கள். அதே போல அம லாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஅய் என அனைத்திலும் இவர்கள் தான் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பாஜக புகழ் பாடி வருகிறார்கள். இந்த வரிசையி லேயே நீதிபதிகளையும் விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள். தற்போ தைய அரசாங்கம் பெரும்பான்மை யுடன் இருப்பதால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல் உள்ளது. 

தற்போது இருக்கும் கொலீஜி யம் முறை குறித்து, மாற்றுக் கருத்து இருக்கிறது. கொலீஜியம் முறை சட்டத்திற்கு உட்பட்டதுதான். அதே நேரம் விமர்சனத்திற்கு அப் பாற்பட்ட தல்ல. கொலீஜியத்தில் இடம்பெற்றி ருப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த நெருக்கமான வர்களை நீதிபதிகளாக நியமித்துள்ளதாக அவர்கள் மீது விமர்சனங்கள் உள்ளன. ஆனால், ஒன்றிய அரசு நேரடியாக நீதிபதிகளை நிய மிப்பதைவிட, கொலீஜியம் முறை சிறந்தது. எனவே, நீதித்துறையை கைப்பற்றுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்க் கப்பட வேண்டும். ஏனெனில் ஜனநாய கத்தின் கடைசி கோட்டை நீதிமன் றம்தான். அதுவும் கைப்பற்றப்பட்டு விட்டால் ஜனநாயகத்தில் மக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போய்விடும்.  தற்போது உள்ள அமைச்சர்கள், சட்ட அமைச்சர் உள்பட பலரும் பட்டம் மட்டுமே பெற்றிருக்கின்றனர். அவர்கள் பயிற்சி செய்வதில்லை. இதனால் வழக்குரை ஞர்கள் குறித்து  அவர்க ளுக்குத் தெரியாது. இன்றைய  வழக்குரைஞர்கள்தான் நாளைய  நீதிபதிகள். இந்நிலையில், நீதிமன் றம் காவி மயமாக்கப்படுவதை நாங்கள் (வழக்குரைஞர்கள்) விரும்பவில்லை."

இவ்வாறு கபில்சிபல் பேட்டி யில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment