திருச்சி, டிச. 9- உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் உறுதி மொழியை வாசிக்க அரசு அலுவலர் கள் ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து எய்ட்ஸ் கூட்டு மருத்துவ சிகிச் சைக்காக சிறப்பாக பணி யாற்றியவர் களுக்கும், சிறப்பான முறையில் குரு திக்கொடை முகாம் நடத் திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பதக் கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் கடந்த ஆண்டு 2.12.2021 திருச்சி பெரியார் மருந்தியல் கல் லூரியின் நிறுவனத் தலை வர், தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வில் நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் குருதிகொடை முகாம் முதல்வர் முனைவர். இரா. செந்தாமரை தலை மையில் சிறப்பாக நடை பெற்றதை பாராட்டி பெரியார் மருந்தியல் கல் லூரிக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர்
மா. பிரதீப்குமார் வழங்கி னார். இதனை நாட்டு நலப்பணி திட்ட அலு வலர் பேரா.அ. ஜெயலட் சுமி பெற்றுக்கொண்டார்.
இக்குருதிக் கொடை முகாமை சிறப்பாக ஒருங் கிணைத்த நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் பேரா. அ. ஜெயலட்சுமி மற்றும் ஒருங்கிணைப்பா ளர் பேரா. பா. பாலசுப் பிரமணியன் மற்றும் குருதி வழங்கிய மாணவர் களுக்கு நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர் கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட் டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment