ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக் கழகம் அறிவித்து உள்ளது.
ஒப்பளிப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.70 லட்சம் செலவில் நூலகங்கள் அமைக்க நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இயக்கப்படும்
சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படு கின்றன என போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவிப்பு.
தடுக்க...
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவக் குப்பத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்.
இயக்க...
சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நெரிசலான நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மின்கம்பங்கள்
மாண்டஸ் புயல் பாதிப்பால் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்ய தற்போது 11 ஆயிரம் களப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் மின் கம்பங்கள் தயாராக உள்ளன. பழுதடைந்து இருந்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.
தாக்கல்
தமிழ்நாட்டில் பழங்குடியினர் பட்டியலில் நரிக் குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை சேர்ப்ப தற்கான அரசமைப்பு (பழங்குடியினர்) ஆணை 2ஆவது திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
டிரோன்
ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களின் (டிரோன்) உற்பத்தியை ஊக்குவிக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி.
முப்படைகளில்...
இராணுவம், கடற்படை, விமானப் படைகளில் மொத்தம் 1.35 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது என பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய்பட் மக்களவையில் தகவல்.
முடியாது
உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு நடத்தும் விவாதங்களை பொதுமக்கள் பார்வைக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தாக்கல்
ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் நேற்று தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தாக்கல் செய்தார்.
No comments:
Post a Comment