சென்னை, டிச.1- தமிழ்நாட்டில் வங்கிக் கணக்கு இல்லாத 14 லட்சத்து 60 ஆயிரம் குடும்ப அட்டை தாரர் களுக்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு துவக்கும்படி, மண்டல இணை பதி வாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தர விட்டுள்ளது.
ஜனவரியில் பொங்கல் பரிசு தொகையை நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒன்றிய அரசின் 'ஆதார்' எண் அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. அப்படி ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்ததில் தமிழ்நாட்டில் 14 லட்சத்து 60 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத விவரத்தை அரசு கண்டறிந் துள்ளது. அவர்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கி களில் சேமிப்புக் கணக்கை துவக்க நடவடிக்கை எடுக்கு மாறு மண்டல இணை பதிவாளர்களிடம் கூட்டுறவு சங்கங் களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சமீபத்தில் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் 'காணொலி' வாயிலாக மண்டல இணை பதிவாளர்களுடன் கடந்த 28.11.2022 அன்று ஆலோசனை நடத்தினர். அதில் வங்கிக் கணக்கு இல்லாத 14.60 லட்சம் கார்டுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவக்க உத்தர விடப்பட்டு உள்ளது.
ஜனவரியில் பொங்கல் பரிசுத் தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்ட மிட்டுள்ளதாகவும் அதற்காகவே வங்கிக் கணக்குகளை விரைந்து துவக்கும் பணியில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment