குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி விவசாயிகள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 10, 2022

குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி விவசாயிகள் போராட்டம்

புதுடில்லி, டிச. 10- ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரி ழந்த விவசாயிகளின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு வழங் கவும், விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கான (எம் எஸ்பி) சட்ட உறுதி மொழியை அளிக்கவும் வலியுறுத்தி அகில இந்திய கிஸான் காங்கிரஸ் அமைப் பைச் சேர்ந்த விவசாயிகள் பலர் டில்லி ஜந்தர் மந்தரில் நேற்று (9.12.2022) போராட்டத்தில் ஈடு பட்டனர்.

அப்போது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருவதாகவும், டில்லி எல் லைகளில் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் ரத்து செய்யப்பட்ட போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்து வருவ தாகவும் இந்த அமைப்பின் விவசாயிகள் ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டினர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் சர்ச் சைக்குரிய இந்த வேளாண் சட் டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஜந்தர் மந்தரில் 9.12.2022 அன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜே வாலா பேசுகையில், ‘கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவ தில் நரேந்திர மோடி அரசு தோல் வியடைந்துள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரானதாகும். மோடி அரசின் விவசாயிகள் விரோத அணுகுமுறைதான் இதற் குக் காரணம். இதனால்தான் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்துவது சிரமம் எனக் கூறுகின்றனர். இந்தப் போராட் டம் ஜந்தர் மந்தருடன் முடிந்து விடக் கூடாது. இதை முன்னெ டுத்துச் செல்ல வேண்டும். தேசத் திற்கு உணவளிக்கும் விவசாயிக ளின் உரிமைகளுக்காக போராட வேண்டும்’ என்றார். 

இந்தப் போராட்டம் குறித்து அகில இந்திய கிஸான் காங்கிரஸ் அமைப்பின் இணை ஒருங்கிணைப் பாளர் திவாரி கூறியதாவது: 

ஒன்றிய அரசு விவசாயிகளுடன் ஒத்துழைக்க மறுப்பதுடன் அவர் களின் பிரச்னைகளையும் தீர்க்க வில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் முடிவ டைந்து ஓராண்டாகிவிட்டது. ஆனால், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துவதில் ஒன்றிய அரசு அளித்த உறுதிமொழி இன் னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது - தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தின் போது உயிரி ழந்த விவசாயிகளின் குடும்பத்தி னருக்கான இழப்பீட்டை உடனடி யாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். மேலும், இந்த போராட் டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் பட்டியலைக்கூட ஒன்றிய அரசு வைத்திருக்காதது கெட்டவாய்ப் பாகும். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக் கக்கூடிய உரிய சட்டம் இன்னும் இந்த தேசத்தில் இல்லை என்றார் அவர். 

இந்தப் போராட்டத்தில் பங் கேற்றவர்கள் காங்கிரஸ் கட்சியின் கொடிகளை ஏந்தி, ஜெய் ஜவான், ஜெய் கிஸான் எனும் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத் தில் உத்தர பிரதேசம், அரியானா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் சில தென் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். பஞ்சாப்பைச் சேர்ந்த விவசாயி திலீப் சிங் கூறுகையில், ‘நாங்கள் மோடி அரசுக்கும், அதன் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைத் திட்டங்களுக்கு எதிராகவும் போராட இங்கு வந்துள்ளோம். இந்த ஆட்சியில் விவசாயிகள் நசுக்கப்படுகின்றனர்’ என்றார்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த கைலாஷ் யாதவ் கூறுகையில், ‘விவசாயிக ளின் இயக்கத்தை பலப்படுத்தவே நாங்கள் இங்கு கூடியுள்ளோம். தற்போதைய அரசின் கீழ் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நமது விவசாயிகளின் ஒன்று படவே இங்கு கூடியுள்ளோம். எங்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை. எங்கள் ஊதியம் இரட்டிப்பாக்கப் படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுபோல எதுவும் நட வடிக்கைவில்லை’ என்றார்.

No comments:

Post a Comment