வைகோ கேள்வி
புதுடில்லி,டிச.9- மதிமுக பொதுச்செய லாளரும் மாநிலங்களவை உறுப் பினருமாகிய வைகோ நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 7.12.2022 அன்று இலங்கை இனப்படுகொலை குறித்து வெளியுறவுத் துறை அமைச் சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரம் வருமாறு:-
அவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் அளித்த அறிக் கையில், மற்ற நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவையும், நமது நேர்மறையான அணுகுமுறையை யும் மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
ஆனால், ஜெனீவா, அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், இலங்கை தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தபோது, என்ன காரணங்களுக் காக இந்தியா வாக்களிக்கவில்லை என்பதை அறிய விரும்புகிறேன்? இது எனது முதல் கேள்வியாகும். இதற்கு அமைச்சர் அவர்களிட மிருந்து பதில் பெற விரும்புகிறேன்.
இரண்டாவது, இலங்கையில் இனப்படுகொலை நடந்தது. லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர், பெண்கள் பாலியல் வன் முறை செய்யப்பட்டனர், குழந்தை கள் கொல்லப்பட்டனர், முந்தைய அரசு ஆயுதங்களை வழங்கியது. அது வேறு. ஆனால், நீங்கள் இப் போது இலங்கைக்கு ஆதரவளிக் கிறீர்கள்.
ஆனால், இலங்கை அம்பாந் தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியதுடன், அண் மையில் சீனப் போர்க்கப்பல் துறை முகத்தில் தரையிறங்கி இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த முக்கியமான பிரச் சினையில், இந்தியாவின் நலனைக் காக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்று வைகோ வின் கேள்விக்கு,
வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எகு.ஜெய்சங்கர் பதிலளிக்கை யில், வைகோ அவர்களின் இரண்டு கேள்விகளுக்கு வருகிறேன். ஒன்று அய்.நா மனித உரிமைகள் ஆணைக் குழுவில் நாம் வாக்களிக்கவில்லை. இது இந்தியாவின் நீண்டகால நிலைப் பாடாகும்.
இந்த அரசாங்கம் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழ் சமூகத் தின் ‘குறைகளைத் தீர்ப்பதற்கும், முன்னேற்றுவதற்கும்' இது மிகவும் ஆக்கபூர்வமான வழியாகும் என்று இதற்கு முந்தைய அரசாங்கங்களும் நினைத்தன. அதுவே எங்களின் அணுகுமுறையாகத் தொடர்கிறது.
தமிழ் சமூகம், சிங்கள சமூகம் மற்றும் ஏனைய சமூகங்களை உள் ளடக்கிய முழு இலங்கைக்கும் நாங் கள் ஆதரவை வழங்கியுள்ளோம். உறுப்பினர் இதை மனதில் கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்.
எனவே, இதுபோன்ற கடுமை யான பொருளாதார சூழ்நிலையில் அண்டை நாட்டுக்கு ஆதரவளிப் பதில் நாங்கள் வகுப்புவாத அணுகு முறையை எடுக்கவில்லை. அதே நேரத்தில் நாம் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்றால், நாம் நமது பொறுப்புகளிலிருந்து விலகிவிட்டது போலாகிவிடும் என்று பதிலளித்தார் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச் சர் ஜெய்சங்கர்.
No comments:
Post a Comment