புதுடில்லி, டிச. 11- இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தி மேற்கொண்ட நடைப்பயணமே காரணம் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் ராகுல் காந்தி நடைப்பயணத்தை இன்னும் தொடங்காத நிலையிலும், கார்கே இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தல் 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைப்பதற்கு 35 இடங்களே போதுமான நிலையில், 40 தொகுதிகளை பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது. இதுவரை இமாச்சலில் ஒரு முறை ஆட்சியில் இருக்கும் கட்சி மறு முறை ஆட்சி அமைத்தது கிடையாது. இந்த தேர்தலிலும் அதுபோலவே பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, காங் கிரசுக்கு ஆட்சிக்கட்டிலை மக்கள் வழங்கியுள்ளனர்.
இமாச்சல் தேர்தலை பொறுத்தவரை ஆரம்பம் முதலாகவே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். வீதிவீதியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது முதல் வேட்பாளர்கள் தேர்வு வரை பிரியங்கா காந்தியின் கடின உழைப்பு இருந்தது. இதுதான் இமாச்சல் வெற்றிக்கு முதன்மைக் காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து மல்லிகார் ஜுன கார்கே கூறுகையில், "இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரசுக்கு அமோக வெற்றியை கொடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் உடனடி யாக நிறைவேற்றப்படும். பாஜகவை நிராகரித்த இமாச்சல் மக்களின் மனநிலையில்தான் தற்போது நாட்டு மக்கள் உள்ளனர்.
இமாச்சலில் இந்த தேர்தல் வெற்றிக்கு தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் என அனைத்து தரப்பினருமே கார ணம். ஆனால், ராகுல் காந்தியின் நடைப்பயணமே இமாச் சல் வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன். அத்துடன், எங்களுக்கு சோனியா காந்தியின் ஆலோசனை களும் துணை இருந்தது. பிரியங்கா காந்தியின் பிரச்சாரமும் மக்களை வெகுவாக ஈர்த்தது" என கார்கே தெரிவித்தார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை இமாச்சலில் இன் னும் தொடங்கவில்லை. அதுபோல, அவர் இமாச்சலில் ஒருமுறை கூட பிரச்சாரத்துக்கும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment