தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, மாநில பொருளாளர் ருக்மாங்கதன், தலைமை நிலைய செயலாளர் ஜெயராமன், துணைப் பொதுச் செயலாளர் துரை மனோகரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து புத்தகங்களை வழங்கி 90ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். (14.12.2022, பெரியார் திடல்)

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த  கோ. சுந்தர்ராஜன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து புத்தகத்தை வழங்கினர் உடன் பேராசிரியர் அரசு செல்லையா, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ். (14.12.2022, பெரியார் திடல்).

தமிழர் தலைவருடன் சந்திப்பு-பயனாடை அணிவிப்பு

அருந்ததி மக்கள் கட்சி தலைவர் தளபதி,செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ரமேஷ், பேராசிரியர் டிக்சன் மாரிதாஸ், கொள்கை பரப்புச் செயலாளர் சைதை மணிமாறன், துணைச் செயலாளர் பால் சுரேஷ். மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஆபிரகாம் லிங்கன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து 90ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.  (14.12.2022, பெரியார் திடல்).

தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து

தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் ந.பஞ்சாட்சரம், பொருளாளர் எஸ்.எஸ்.எஸ்.சிவா, துணை செயலாளர் ஏ. வெங்கடேசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். உடன் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன். (14.12.2022, பெரியார் திடல்).


No comments:

Post a Comment