சென்னை, டிச. 10- இந்தியாவி லிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் துறைக்கான டிராக்டர் பிராண்டுகளில் முன்னிலை வகிக்கும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் எப்பொழுதும் மிகச் சிறந்த தொழில் நுட்ப உதவியோடு ஈடு இணையற்ற தயாரிப்பு களை வழங்குகிறது.
பிராந்திய தேவைக ளுக்கேற்ப தயாரிப்புகளை அளிக்கும் அணுகுமுறை காரணமாக இந்நிறுவ னம், கடந்த 8 மாதங்களில் 1 லட்சம் டிராக்டர்களை நடப்பு நிதி ஆண்டில் விற்பனை செய்துள்ளது.
மிகச் சிறப்பான திட் டமிடல் மற்றும் வாடிக் கையாளரின் தேவைக் கேற்ப பொருள்களைத் தயாரித்து அளிப்பது என்ற அணுகுமுறை மூலம் இந்த விற்பனை அளவை சில மாதங்களிலேயே எட்ட முடிந்தது. இவை அனைத்தும் உத்தி சார் அடிப்படையில் நிறுவ னம் எடுத்த முடிவுகள் சரியானவையே என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
இணை மேலாண் இயக்குநர் ரமன் மிட்டல் இந்நிறுவனத்தின் மிகச் சிறப்பான செயல்பாடு குறித்து கூறுகையில், “எங்கள் நிறுவனம் 8 மாதங்களில் ஒரு லட்சம் டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். சந்தையின் போக்கை நிறுவனம் நன்கு அறிந்து அதற்கேற்ப செயல்படுகிறது என்ப தையே இது காட்டுகிறது. தொடர்ந்து 6 ஆண்டுக ளாக இந்தியாவில் உள்ள வேளாண் சமூகத்திற்கு நாங்கள் அளித்த உத்திர வாதத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகி றோம். இதை வேளாண் சமூகத்தினரும் அங்கீகரித் ததன் வெளிப்பாடுதான் எங்கள் விற்பனை வளர்ச்சி" என்று கூறினார்.
No comments:
Post a Comment