தாயாருக்கு 30 ஆண்டுகளாக சில நூறு ரூபாய்க்கான வெள்ளைப்புடவை, தனக்கு மட்டும் லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பெரு நிறுவன ஆடைகள்!
2014 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மோடி வண்ண வண்ண விலை உயர்ந்த ஆடம்பர ஆடைகளை அணிந்து தேர்தலின் போது மட்டும் தாயாரை தேடிச்சென்று ‘ஆசீர்வாதம்‘ வாங்கி அடுத்த நாள் சரியாக வாக்குப்பதிவு நாள் அன்று அனைத்து தொலைக்காட்சி மற்றும் அச்சு நாளிதழ்கள் முதல் பக்கத்தில் அதை பதிப்பிக்கும்
இது தொடர்கதையாகி விட்டது. ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான சந்திப்பு என்று அதை விமர்சனம் செய்யவில்லை
கடந்த 3 ஆம் தேதி அன்று மோடி தனது தாயாரைப் பார்க்கச் சென்றபோது அவர் அணிந்திருந்த சால்வை என்ற மேலே போர்த்தியிருந்த துணியின் விலை ஒரு லட்சத்து முப்பத்து 4 ஆயிரம் ரூபாய் என்று மராட்டியிலிருந்து வெளிவரும் ‘ஸி மராட்டி' நாளிதழ் சான்றுகளோடு அவர் அணிந்திருந்த சால்வையின் பெயர், அதன் விலை பட்டியலோடு வெளியிட்டிருந்தது
தனது தாயாருக்கு சில நூறுகளில் கிடைக்கும் வெள்ளைப்புடவையை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக அணியவைத்து தான்மட்டும் ஒவ்வொரு முறை தேர்தல் பரப்புரைக்காக தாயைப் பார்க்கசெல்லும் போதெல்லாம் லட்சக்கணக்கில் மதிப்புடைய ஆடை அணிந்து செல்கிறாரே. இதுதான் ஏழைத்தாய்க்கு பிரதமர் செய்யும் மரியாதையா?
No comments:
Post a Comment