மக்களின் நலனில் மருந்தாளுநரின் பங்கு-கட்டுரைப் போட்டி திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவி வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

மக்களின் நலனில் மருந்தாளுநரின் பங்கு-கட்டுரைப் போட்டி திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவி வெற்றி

தேசிய மருந்தியல் வார விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு  மருந்தியல் அறக்கட்டளை சார்பாக  மாநில அளவில் மருந்தியல் கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற  கட்டுரைப் போட்டியில்  “மக்களின் நலனில் மருந்தாளுநரின் பங்கு”  என்ற தலைப்பில், நமது பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் நான்காம் ஆண்டு  பயிலும் மாணவி மு. புஷ்மிதா  கலந்து கொண்டு  இரண்டாவது பரிசாக ரூபாய் 8,000 பரிசுத் தொகையினையும், நினைவுப்பரிசினையும், பாராட்டுச் சான்றிதழையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.  பரிசு பெற்ற மாணவியினை  கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment