கன்னியாகுமரி, டிச. 22- கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக விழிப்புணர்வு திண்ணைப் பிரச்சாரம் செய் தனர் தோழர்கள். பொதுமக் களை சந்தித்து தந்தை பெரி யாருடைய கருத்துகளை எடுத்துக் கூறினர்.
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப் பிரமணியம் தலைமை தாங் கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன் னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பொதுக் குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் பா.பொன்னுரா சன், தொழிலாளரணி அமைப் பாளர் ச.ச. கருணாநிதி இளைஞரணி செயலாளர் அலெக்சாண்டர், கன்னியா குமரி கிளை அமைப்பாளர் க.யுவான்ஸ், முத்து வைர வன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுடைய கருத்துகள் அடங் கிய துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி திண்ணைப் பிரச்சாரம் செய் தனர் குமரி மாவட்ட திரா விடர் கழக தோழர்கள்.
No comments:
Post a Comment