சேலம் டிச.5 மல்லூர் பட்டதாரி வாலிபர், விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், உடலுறுப்புகளை பெற்றோர் கொடையாக அளித்தனர்.
சேலம் மாவட்டம் மல்லூரை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மணிகண்டன், (26), பி.காம்., படித்த இவர், சேலம் 'சேகோசர்வ்' நிறுவனத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றினார்.கடந்த, 30ஆம் தேதி பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு இரவு திரும்பிக் கொண்டி ருந்தபோது கொண்டலாம்பட்டி சந்திப்பில் சென்றபோது, லாரி மோதியதில், தலையின் பின்பகுதியில் ரத்தக்காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் டிச.1இல் அனுமதிக்கப்பட்டார். குருதிக்கசிவை கட்டுப்படுத்த முடியாததால் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், மணிகண்டனின் உடலுறுப்புகளை கொடை செய்ய முன்வந்தனர். இரு கண்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், இரு சிறு நீரகங்கள் கொடையாக கொடுக்கப் பட்டன. சேலம் மருத்துவமனைக்கு சிறு நீரகங்களும் இதர உறுப்புகள் சென்னை, கோவை, ஈரோடு மருத்துவ மனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment