வாசிங்டன் டிச. 14- எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா - சீனாவுக்கு அய்.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல் லைப்பிரச்சினை மீண் டும் தலைதூக்க தொடங் கியுள்ளது.
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ஆ-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய - சீன படைகள் இடையே மோதல் ஏற் பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர் கள் வீரமரணம் அடைந் தனர். மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயி ரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
இந்த மோதலுக்கு பின் இரு நாடுகளும் எல் லையில் படைகளை குவித்து வைத்துள்ளன. லடாக் மோதலுக்கு பின் சற்று தணிந்திருந்த எல்லை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. அந்த வகையில் அரு ணாச் சலப்பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யங்ட்சி பகுதியில் உண்மை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9-ஆம் தேதி இந்திய-சீன படைகள் மோதிக் கொண்டன. இந்த மோத லில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந் தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள் ளது.
இந்நிலையில், எல்லை யில் பதற்றத்தை தணிக் கும்படி இந்தியா - சீனா வுக்கு அய்.நா. வேண்டு கோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அய். நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட் ரொஸ் செய்தித்தொடர் பாளர் ஸ்டெப்னி டுஜரிக் கூறுகையில், இந்தியா - சீன படைகள் மோதல் குறித்து அறிந்தோம். எல் லையில் பதற்றம் மேலும் அதிகரிக்காமல் பதற்றம் தணிய நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்' என்றார்
No comments:
Post a Comment